Tuesday, August 16, 2011

ரெய்கி இரகசியங்கள்

 bksureshv@gmail.com


ரெய்கி இரகசியங்கள்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பெரியோர் வாக்கு. உலகில் பிறந்த மக்கள் அனைவரும் விரும்புவது நோயில்லாமல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றுதான். ஏனெனில் மற்ற எவ்வளவோ செல்வங்கள் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மற்ற எல்லா சுகங்களையும் அனுபவிக்க முடியும். உடல் சுகமில்லாவிட்டால் வாழ்க்கையில் விரக்திதான் வரும். வாழ்வானது சுகம் பெறுவதற்கே. வேதனையை அனுபவிப்பதற்கல்ல. இந்த நவீன இயந்தில உலகில் மக்கள் இனைவரும் நலமில்லாமலும் திருப்தி இல்லாமலும் பிரச்சனைகளோடும்தான் வாழ்நாளைக் கடத்திக்கொண்டிருக்கின்றனர். ஒரு காலகட்டத்தில் நாம் யோசித்துப் பார்க்கும்போது, `அட! என்னடா இது வாழ்க்கை' என்றும் நாம் ஏன் பூவுலகில் பிறந்தோம் என்றும் எண்ணத் தோன்றும். இப்படியில்லாமல் ஒவ்வொரு மணிநேரமும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை ரசித்தும் அனுபவித்தும் சந்தோஷமாகக் கூடி வாழ்ந்தும் முடிப்பதும்தான் ஒரு முழுமையான, திருப்தியான, ஆத்மார்த்தமான இன்பத்தை அடைய முடியும். இந்த ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்க்கையை அற்புத அதிசய ரெய்கியின் மூலம் பெற முடியும் என்பது உறுதி.

ரெய்கி என்பதன் விளக்கம்: ரெய் என்றால் தூய்மையான, புனிதமான என்றும் கீ என்றால் Cosmic enrgy (Universal Power) என்றும் சொல்லலாம். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில். பிண்டத்தில் உள்ளது அண்டத்தில். அண்டத்தில் அளவிலா சக்திகள் இயங்குகின்றன. அதே சக்திகள் உடம்பிலும் இயங்குகின்றன. உலகம் இயங்கக் காரணமாக இருப்பதே இந்த சக்திதான். உலகில் உள்ள எல்லா உயிரினங்கள், தாவரங்கள் மட்டுமன்றி, நதிகள் ஓடுவது, நெருப்பு எரிவது, காற்று வீசுவது போன்ற எல்லா இயக்கங்களுக்கும் காரணம் சூட்சும சக்திதான். பஞ்ச பூதங்களும் அதன் விதிப்படி பிரபஞ்சத்தில் இயங்குவது போல, நமது உடம்பிலும் பஞ்சபூத சக்திகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதனை நாம் உணருவதில்லை. ரெய்கியின் மூலமாக அந்த சக்தியினை நாம் உணரமுடியும். எப்படியெனில் பிரபஞ்ச சக்தியை சஹஸ்ரஹார சக்கரத்தின் மூலமாக, மற்ற எல்லா சக்கரங்களுக்கும் சக்தியைச் செலுத்தி, அதன்பின் தியானங்கள், பயிற்சி வழிமுறைகள் மூலமாக அந்த சக்தியை கைக்கு (உள்ளங்கை) கொண்டுவந்து தனக்குத் தானே சக்தியக்ஷட்டிக்கொள்ளவும் அடுத்தவர்களுக்கும் சக்தியூட்டவும் பயன்படுத்தலாம். இதை சூட்சும சக்தி என்றும் சொல்லலாம். இதைக் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் நாம் நூறு சதவிகிதம் உறுதியாக, கண்டிப்பாக உணர முடியும். இதை ரெய்கி சூட்சுமம் என்றும் சொல்லலாம்.

ரெய்கி சிறப்புகளும் பயன்களும்: ஒரு குரு மூலமாக தீட்சை எடுக்கும்போது சக்கரங்கள் திறக்கப்பட்டு சூட்சும சக்தி மூலாதாரத்தை அடைந்து பயிற்சியின் மூலமாக கைகளுக்குக் கொண்டுவரும்போது அவர்கள் ரெய்கி சேனல் ஆகிவிடுகிறார்கள். சிலருக்கு இது உண்மையில் சாத்தியப்படுமா என்ற சந்தேகம் எழலாம். எவ்வளவோ அதிசயங்கள் ஆங்காங்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியாது. நிரூபிக்க முடியாத எல்லாவற்றையும் உண்மையில்லை என்றும் சொல்லிவிட முடியாது. நடக்கும் சில விஷயங்களின் கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது. தியானம் செய்வதன் மூலமாகக்கூட சில விஷயத்தை நடத்திக்காட்ட முடியும். ரெய்கி உடம்புக்கும் மனதுக்கும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மற்ற எவ்வளவோ பிரச்சனைகளுக்கும் விஷயங்களுக்கும் பயன்படுகிறது. மருந்து மாத்திரையின்றி கைகள் மூலமாகவே அதிசயங்களைக் காண்பதே சிறப்பம்சமாகும்.

மேலும் மன அழுத்தம், டிப்ரஷன், தாழ்வு மனப்பான்மை நீங்கும். படிக்கும் மாணவ மாணவியருக்கு ஞாபகசக்தி, அறிவுத்திறன் அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அடம்பிடித்தல், தேவையற்ற பழக்கவழக்கங்கள், அதிகமாக மது அருந்துதல், மனதில் எதிர்மறையான எண்ணம் தோன்றுதல் போன்றவற்றுக்குத் தீர்வாகும். ஜீரணசக்தியை அதிகரிக்கச் செய்தல், வயிறு சம்பந்தமான பிரச்சனைக்கும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். நாம் இருந்த இடத்திலிருந்தே தொலைதூரத்தில் உள்ளவர்களுக்கும் சக்தி அனுப்பவும் நம் உள்ளுணர்வை மேம்படுத்தவும் நமக்குப் பாதுகாப்புக் கவசம் போட்டுக் கொள்ளவும் உதவும். கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கப் பயன்படும். நாம் வாழும் வீட்டைத் தூய்மைப் படுத்தி, சக்தியூட்டி, அமைதியாக, ஆனந்தமாக வாழ, வாழ்க்கையின் எல்லா நிலைகளுக்கும் பயன்படுவதால், ரெய்கி வாழ்க்கையை வாழவைக்கும் வாழ்க்கைக்கலை என்றால் மிகையாகாது.

ரெய்கியோடு வாஸ்துவும் பெங்சுயியும்:.இயற்கையின் படைப்பில் 84 இலட்சம் ஜீவராசிகள் இருக்கின்றன. அதில் அற்புதமான படைப்பு மனித இனமே. இந்த மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் மூன்றும் முக்கியமானதாகும். உறைவிடமாகிய வீட்டை வாஸ்து சாஸ்திரத்திற்குப் புறம்பாக அமைத்துக்கொள்பவர்கள் தான் பலத்த கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள். வீட்டின் அமைப்புகளை பஞ்சபூத சக்திகளின் அடிப்படையில் அமைத்தால் சுபிட்சம் இருக்கும். மேலும் காற்றோட்டமும் உள்ளிருந்து வெளியே போவதும் வெளியில் இருந்து உள்ளே வருவதும் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும். திசைகளையும் அடிப்படையாகக் கொண்டது வாஸ்து.

கிழக்கு: இந்திரனுக்குரியது. இதனை பித்ரு ஸ்தானம் என்றும் சொல்வர். இத்திசை இந்திரனுக்குரியதாக இருப்பதால் செல்வ வளம், புகழ், கல்வி, அதிர்ஷ்டம், வெற்றி முதலியவற்றைத் தரும். குறைபாடுகள் ஏற்பட்டால் ஆண்களையும்  ஆண் வாரிசுகளையும் பாதிக்கும்.

தென்கிழக்கு: அக்னிக்குரியது. சமையலறை, சாப்பிடும் அறை அமைய உசிதமான இடம். வாஸ்துப்படி அமைந்தால் உடல்நலம், மனநலம் என்பவற்றோடு பெண்களுக்கு மேன்மையும் தரும். வடமேற்கிலும் சமையறை வைக்கலாம். தவறாக இருநு்தால் பெண்மணியைப் பாதிக்கும். ஆஸ்பத்திரி செலவும் ஏற்படும்.

தெற்கு: இந்தப் பகுதியை எமதர்மர் ஆட்சி செய்கிறார். குறைபாடுகள் இருந்தால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். பெண்கள் உடல்நலமும் பாதிக்கப்படும். நோய்கள் ஏற்படும்.

தென்மேற்கு: இந்தப் பகுதி நைருதிக்குரியது. பலன்களைத் தாமதப்படுத்தாமல் விரைவாக வழங்குவதில் நைருதி சமர்த்தன். ஈசானியப் பகுதிக்கு எந்தளவு முக்கியத்துவம் தரப்படுகிறதோ, அந்தளவுக்கு நைருதிக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.

மேற்கு: வருணன். மழைக்கடவுள். செழிப்பையும் வளர்ச்சியையும் தருபவன். இந்தப் பகுதி ஆண்களின் மேல் ஆதிக்கம் செலுத்தும் பகுதி. பொருளாதார வளர்ச்சி, குடும்ப கௌரவம், அந்தஸ்து போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் திசை. இது ஆண் வாரிசுகளுக்கு மேம்பட்ட பலனைத் தரும்.

வடமேற்கு: வாயுபகவானுக்குரியது. துரிதமான வேகம் கொண்டவன். பெண்களின் வாழ்க்கை, கணவன்-மனைவி உறவில் பலன்தரும். குறைபாடு இருந்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, வழக்குகள், பாகப்பிரிவினை மற்றும் பெண்களின் ஆதிக்கத்தால் ஆண்கள் பலம் குறைவது போன்றவை இருக்கும்.

வடக்கு: மாத்ரு ஸ்தானம். குபேரனுக்குரியது. செல்வத்தின் அதிபதி. சமூகத்தில் அந்தஸ்து, கௌரவம், செல்வச் செழிப்பு உண்டாகும். குறைபாடு இருந்தால் எதிர்மறையாக இருக்கும்.

வடகிழக்கு: ஈசானிய மூலை. இதை சனிமூலை என்றும் சொல்லலாம். ஈசனுக்குரியது. சூரிய சக்தியும் காந்த சக்தியும் இணைந்த பகுதி. எடை குறைவான பொருட்களும் புனிதமான பொருட்களும் வைத்து, எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தற்சமயம் சைனீஸ் வாஸ்துப்படி பொருட்களை அதனதன் இடத்தில் வைத்து வளத்தோடும் நலத்தோடும் வாழலாம்.

1 comment:

  1. Sairam and vanakam sir.. Thank you very much sir for the very useful info.Sir i have some doubts here, kindly hope that sir may help.. Myself had attend reiki level 1,kundalini awakening and 3rd eye awakening..Recently due to family problems..am couldn't do meditation.. would that will give any side effects for myself, or on my progress in reiki?.

    ReplyDelete