Tuesday, August 16, 2011

அடுத்ததவருக்கு சக்தி அளித்தல் Heal to others


bksureshv@gmail.com


உசுயி அவர்கள் 21 வருட ஆராய்ச்சியின் பயனால்  அவர் கியோடர் என்னுமிடத்தில், சூரியோமா என்னும் மலையில்,  21 நாள் தியானம் செய்ததன் பலனாக ஆகாசத்திலிருந்தே அவருக்கு சக்தி கிடைத்தது.  அப்போது அவருடைய உடல் சுருங்கி, உள்ளம் விரிவடைவதை நன்கு உணர்ந்தார். கண்ணை திறந்து பார்த்ததும், ஆகாயத்தில் வானவில் கலரினுள் சங்கேத குறியீடுகளைப் பார்த்தார். அப்பொழுதே அசரீரி ஒலியும் அவருக்கு கிடைத்தது.  தியானத்தின் முழுப்பலனும் கிடைத்த திருப்தியில் (Physical Health, Mental Health, Emeretial Health)  அவர் மலையை விட்டு கீழே இறங்கினார்.  அப்போது ஒரு பெரிய கல் ஒன்று, அவருடைய கால் பெருவிரலை காயப்படுத்தியது.  அதோடு இரத்தமும் கொட்டிற்று. அவர் உடனே தன்னுடைய கையை, காயப்பட்ட விரலின் அருகே கொண்டு போனார்.  அந்த சமயம் தான் அவருக்குள் அற்புதம் நடந்தது.  அதாவது அவருடைய கைகளிலிருந்து சக்தி வெளிப்பட்டது.  அதனால் காயத்தின் வலியும் நின்றது.  இரத்தமும் நின்றது.  இது அவருக்கே கிடைத்த முதல் அனுபவமாக இருந்தது.  இந்த முறையைத் தான் தனக்கு தானே சுய சிகிச்சை அளித்தல் (Self Healing) என்று சொல்லாம்.

அடுத்ததவருக்கு சக்தி அளித்தல் Heal to others
மிகாவ் உசுயி அவர்கள். மலையை விட்டு முழுவதுமாக கீழே இறங்கியவுடன். 21 நாளாக விரதம் (fasting) இருந்ததால், ஒரு ஹோட்டலுக்குள் உணவு சாப்பிடச் சென்றார்.  அங்கே ஒரு சிறிய பெண் பல் வலியால் தாங்க முடியாத வேதனையில், அழுது துடித்துக் கொண்டிருந்தததைக் கண்டார்.  உடனே அந்தப் பெண்ணின் அருகே சென்று, தன் கைகளைக் கொண்டு சக்தியூட்டி வலியை குணப்படுத்தினார்.  அழுது கொண்டிருந்த அந்தப்பெண், வலி முழுவதும் நீங்கி, சிரித்துக்கொண்டு துள்ளி குதித்து வெளியே விளையாட சென்று விட்டது.  அவர் தன் உணவை முடித்துக்கொண்டு, ஹோட்டலை விட்டு வெளியே வந்தார்.  ரோட்டில் வயது முதிர்ந்த ஒரு பெரியவர் நடக்க முடியாமல் செல்வதைப் பார்த்தார்.  அவரருகே சென்று அவரை குணப்படுத்தினார். இன்னும் பலரை குணப்படுத்துவதற்கு சக்தியும் அவர் கைகூடி வரப்பெற்றதால், ஜப்பானில் ஆஞுஞ்ஞ்ஞுணூ ஞிடிணாதூ என்னுமிடத்தில் நிலையாக உட்கார்ந்து, பல வழிகளிலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை, ரெய்கி சக்தியினால் குணப்படுத்தி, நல்வழி காட்டினார்.  தன் வாழ்வின் கடைசி வரைக்கும் அவர் இதே போலவே செய்து, இறக்கும் தருவாய் சமயத்தில் டாக்டர்.  சுஜிரோ ஹயாஷி என்பவருக்கு இந்த இரகசிய பரிமாற்றம் செய்துவிட்டு அவர் மறைந்தார்.

No comments:

Post a Comment