Tuesday, August 16, 2011

ரெய்கி Crystal Theraphy

 bksureshv@gmail.com

ரெய்கி ஓர் அற்புத அதிசயம்

சுகத்திற்கே வாழ்வு உலகில் எத்தனையோ வகை செல்வங்கள் இருந்தாலும் முதன்மையானது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஏனென்றால் சுவரிலிருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் பெரிது என்பது பெரியோர் சொல். ஈசனும் சுகத்தின்றே படைத்தானே நம்மை சுகம் என்பது நமது பிறப்புரிமை. அதை யாராலும் தடுக்க முடியாது. நம் ஒவ்வொருவருக்குள் அளவிட முடியாத ஐஸ்வர்யமும், ஆற்றல் மிக்க சக்தியும், ஐஸ்வர்யமும் இருப்பதை உள்மனக் கண்ணை திறந்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அவரவர்களுக்கு தேவையானதை அடையலாம். காந்தசக்தியூட்டப்பட்ட துண்டானது தனது எடையைவிட 12 மடங்கு எடையை தூக்கும் சக்தி பெற்றது. ஆனால் சாதாரண இரும்பால் சிறு துரும்பை கூட அசைக்க முடியாது. அதுபோல மனிதர்களில் இருவகை உள்ளனர்.


1. தனக்குள் இருக்கும் சக்தி, மனஉறுதி நம்பிக்கை படைத்தவர்கள்.

2. மற்றவர்கள் காந்தசக்தி இல்லாதவர்கள் வகையைச் சார்ந்தவர்கள்.


முதல் தன்மை உடையவர்கள் வாழ்க்கையில் நினைத்ததை ஜெயிக்கும் தன்மை படைத்தவர்கள் மற்றவர் எதிலும் தோல்வியை சந்திப்பவர்கள். இந்த மாதிரி எதிர்மறை சக்தி தன்மை படைத்தவர்களும் மற்ற எல்லோருமே ரெய்கி மூலமாக உள்மனதின் ஆற்றல்களை பயன்படுத்தி அத்துடன் பூமிக்கடியில் இயற்கையாக கிடைக்கும் கிரிஸ்டல்களின் துணைகொண்டும் வாழ்க்கைக்கு தேவையான அமைதி, ஆரோக்யம், ஐஸ்வர்யம், எல்லா சக்திகளையும் அடையலாம். இத்தகைய அபரிதமான சக்திகளை வெளியில் தேடாமல் தமக்குள்ளே இருப்பதை அறிந்து சில பயிற்சிகளை கற்றுக்கொண்டு அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.


ஒவ்வொருவரும் ரெய்கி கற்றுக் கொண்டால் மனதில் உள்ள அழுக்குகள் நீங்கி உடம்பின் ஏழு சக்கரங்களும் திறக்கப்பட்டு, நமக்கு நாமே சக்தி கொடுத்து, மற்றவர்களுக்கு சக்தி அளிக்கலாம். நமக்கு பாதுகாப்பு கவசம்போட்டு தீய சக்திகளிடமிருந்து அனுகாதவாறு இருக்கலாம். நாம் இருக்கும் இடத்திலிருந்தே தொலைதூர சிகிச்சை செய்யலாம். ஞாபக சக்தி அதிகரிக்கவும், கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கவும், பிரிந்தவர் ஒன்று சேரவும், மற்றும் பல விஷயங்களுக்கும் ரெய்கி பயன்படுத்தலாம். நமக்கு தேவையானபோது சக்தியை உபயோகிக்கலாம். வேண்டாதபோதும் நமக்குள்ளே சக்தி இருக்கும்.


உலகில் எதை எதையோ அதிசயங்கள் என்ற சொல்லி உள்ளார்கள். ஆனால் அந்த அதிசயங்களை விட மனிதனுக்குள் இருக்கும் இந்த சக்தி தான் ஓர் அதிசய அற்புதமாகும். இதனால் தான் ரெய்கி ஓர் அற்புத அதிசயம் என்று பெயர் வந்தது. ரெய்கியில் பல குறியீடுகள் உள்ளது. அக்குறியீடு பல பிரச்சனைகளுகு பெரிதும் பயன்படும். ஸோவரம் மூச்சுப்பயிற்சி உடம்பையும் மனதையும் சுத்திகரிக்கம். ரெய்கி தியானம் உடம்பின் உள் உறுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சக்தி அதிகரிக்க செய்யும். சக்ரா தியானம் ஏழு சக்கரங்களையும் சமநிலையில் வைத்து, உடம்பின் ஆராவையும் அதிகரிக்க செய்யும். இன்னும் இதுபோன்ற பல பயிற்சிகள் உள்ளன.

ரெய்கியோடு நோய் தீர்க்கும் கிரிஸ்டல்கள்

கார்னெட்: கார்னெட் கற்கள் கருப்பு, பிங்க், சிவப்பு, மஞ்சள் கலந்த பிரவுன் ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கின்றன. இக்கற்கள் மனக்குழப்பத்தை சரி செய்கிறது. எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் போக்குகிறது. இக்கல்லை வைத்து தியானம் செய்யலாம். சக்கரங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு வைக்கலாம். நரம்பு தளர்ச்சி, நரம்பு வலிகள், தங்கத்தில் கட்டி அணியலாம். 5 கிராம், 10 கிராம் எடையில் பணப்பெட்டியில் வைத்து இருந்தால் தன ஆகர்ஷண சக்தியைக் கொடுக்கிறது. பெண்கள் அனைவரும் அணியலாம். லஷ்மி கடாஷம், ஐஸ்வர்யம் பெருகும். ரூபிக்கு பதிலாகவும் அணியலாம்.

ஜேடு: இது பச்சை நிறமாக இருக்கும். மரகதப்பச்சைக்கு பதிலாக உபயோகிக்கலாம். உயர் இரத்த அழுத்த நோயை குணப்படுத்த மிகவும் உதவி செய்யும். இருதய சக்கரத்தை பலப்படுத்தும். டயபடீஸ் நோய்க்கும், இரத்த ஓட்டம் சம்பந்தமான பிரச்சனைக்கும் மாலையாக அணியலாம். இதில் Iron Jade உள்ளது. வெயில் காலத்தில் sunstroke ஐ தடுக்கவும், பித்தப்பை கற்களை நீக்கவும், தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவும் பயன்படுகிறது. மேலும் நல்ல வசதிகளையும், அதிர்ஷ்டத்தையும் தருகிறது.

லாபிஸ் லசுலி: யோகா, ரெய்கி, தியானம் செய்பவர்களுக்கு இக்கல் மனதில் அமைதி நம்பிக்கை தருகிறது. உணர்ச்சி வசப்படுதலில் இருந்து விடுவிக்கவும், கோபத்தை தவிர்க்கவும் வழி செய்கிறது. ஆன்மீக சக்தி அதிகரிக்கிறது. நரம்புதளர்ச்சி, மூளைக்கோளாறு, ஞாபகச்சக்தி பயன்படுத்தலாம். தோல் நோய்க்கும் பயன்படுத்தலாம். உயர்நிலை தியானம் அடையலாம். முதல் 2 சக்கரத்துக்கும் உபயோகப்படுத்தும்போது மேல்நிலையை அடையலாம்.

அமிதிஸ்டு: இதை செவ்வந்திக்கல், லட்சுமிக்கல் என்றும்சொல்லலாம். Light and Dark கலரில் இருக்கும். இது குரல் வளத்தை அதிகப்படுத்துகிறது. நெற்றியில் வைக்கும் போது தலைவலி, தூக்கமின்மை, மனஅழுத்தம் குறைய உதவுகிறது. படிக்கும் மாணவர்களுக்கு ஞாபகசக்தி கிடைக்கும். கிரிஸ்டல்மரம், திராட்சை கொத்து, படிக்கும் அறையில் வைக்கும் போது அதன் அதிர்வு அலைகள் அந்த இடத்தில் பரவி படிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். பரீட்சை நேரங்களில் டாலர், மோதிரம் அணியலாம். பணப்பெட்டியில் வைக்கலாம்.

ரோஸ்குவார்ட்ஸ்: உடம்புக்கு சூடுதன்மை கொடுக்கும். தீயசக்திகளை தடுப்பதில் அதிக சக்தி வாய்ந்தது. வீடு கட்டும்போது அடியில் போடலாம். வீட்டினுள்ளும், பிரமீடு, மரம் வைக்க, கணவன் மனைவி அன்பு அதிகரிக்க, தீயசக்தி தடுக்க உதவும். வீசிங் பிரச்சனைக்கு உதவும். ஜேடு, பெரிடாட், ஒனிக்ஸ் பணத்தை அதிகரிக்க செய்யும்.

கார்னீலியன்: இது ஆரஞ்சு கலரில் இருக்கும். உடம்பின் தொப்புளுக்கு கீழ் உள்ளது. பெண்களின் Period Irregular, Over Bleeding கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்திற்கும் ஏற்றது. Plenty of Wealஐ கொடுக்கும். வாழ்க்கையில் வெற்றிகளை அடைய இதுபோன்ற கிரிஸ்டல்களை பயன்படுத்தி நன்மை அடையலாம்.

1 comment:

  1. Top Slot Machines Casinos - MapYRO
    Looking for the 밀양 출장마사지 best slot machines in Vegas? Here's 원주 출장샵 a list of the top casinos with slots at 여주 출장샵 the best 강원도 출장샵 casinos in 2021.Are there slots casinos in Vegas?Do you need 의정부 출장안마 to bet at casino sites in Vegas?

    ReplyDelete