Tuesday, August 16, 2011

ருத்திராக்ஷம் மணிகளை அணிய வேண்டிய காலங்கள்

BKSURESHV@GMAIL.COM

ருத்திராக்ஷம் மணிகளை அணிய வேண்டிய காலங்கள்

வேத பாராயணம், வேதம் கற்றல், சிவநாம ஜெபம், சந்தியா வந்தனம், வேதம் ஓதுதல், சிவபூஜை, சிவ புராணம் வாசித்தல், ஓதுவதை கேட்டல், சிவ ஜெப தியானம், சிவாலய தரிசனம், தேவார திருவாசகம், சிவதலங்களை தரிசிக்கும் சமயம், புனித தீர்த்தங்களில் நீராடல், விரத காலம், இறந்தவர்கள் நினைவு நாளில் சீரார்த்தம் சடங்குகள் செய்யும் காலம்.  புனித விழா காலங்களில் ருத்திராக்ஷம் மணிகளை அணியலாம்.

ருத்திராக்ஷம் மணிகளை அணியக் கூடாத காலங்கள்

குழந்தை பிறந்த தீட்டு, மரணமடைந்த தீட்டு, மாதவிலக்கு தீட்டு, குஷ்டம் போன்ற பெரு வியாதி காலம், தாம்பத்திய உறவு காலம், மலம் கழிக்கும் காலம், தூங்கும் சமயங்களில் ருத்திராக்ஷம் மணிகளை கழற்றி வைத்து விட வேண்டும்.  கழற்றிய மணியை அணியும்போது சிவநாமம் சொல்லி அணிய வேண்டும்.

வாரத்தின் எந்த கிழமைகளில் பிறந்தவர்களுக்கு அணிய வேண்டிய ருத்திராக்ஷ மணிகள் விவரம்:

கிழமை கிரகம் அதிதேவதை பிரதி தேவதை
அணிய
வேண்டிய
ருத்திராக்ஷ
மணிகள்
ஞாயிறு சூரியன் அக்னி ருத்திரன் 1-3-5-11
முக மணிகள்
திங்கள் சந்திரன் வருணன் துர்க்கை உமாதேவி 2-5-7
முக மணிகள்
செவ்வாய் அங்காரகன் பூமிதேவி ஷண்முகா 3-7-6
முக மணிகள்
புதன் புதன் விஷ்ணு புருசோத்தமர் 4-10-21
முக மணிகள்
வியாழன் குரு இந்திரன் பிரம்மா 4-5-8
முக மணிகள்
வெள்ளி சுக்கிரன் இந்திராணி இந்திரன் 6-7-8
முக மணிகள்
சனி சனிஸ்வரன் யமன் பிரம்மா 7-3-4
முக மணிகள்

27 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ருத்திரக்ஷ மணிகள்

நட்சத்திரங்கள் கிரகம் ருத்திராக்ஷ மணிகள்
அசுவினி, மகம், மூலம் கேது 9-2-3 முக மணிகள்
பரணி, பூரம், பூராடம் சுக்கிரன் 6 முக மணிகள்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் சூரியன் 1-3-11-12 முக மணிகள்
ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் சந்திரன் 2-3 முக மணிகள்
மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் செவ்வாய்     3 முக மணிகள்
திருவாதிரை, ஸ்வாதி, சதயம் ராகு 8-5-11 முக மணிகள்
புனர்பூசம், விசாகம், புரட்டாதி குரு 5 முக மணிகள்
பூசம், அனுசம், உத்திரட்டாதி சனி 7 முக மணிகள்
ஆயில்யம், கேட்டை, ரேவதி புதன் 4 முக மணிகள்

12 ராசிகளில்/லக்கினங்களில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ருத்திராக்ஷ மணிகள்

ராசி/லக்கனம்   ராசி அதிபதி   சாதக கிரகம்  
மேசம் செவ்வாய் செவ்/குரு 3 முகம், 5 முக மணிகள்
ரிஷபம் சுக்கிரன் புதன்/சனி 6, 4, 7 முக மணிகள்
மிதுனம் புதன் புத/சுக் 4, 6 முக மணிகள்
கடகம் சந்திரன் சந்தி/செவ் 3, 2 முக மணிகள்
சிம்மம் சூரியன் சூரி/செவ் 1, 12, 3 முக மணிகள்
கன்னி புதன் புதன்/சுக்கி 4 - 6 முக மணிகள்
துலாம் சுக்கிரன் சுக்கி/சனி 6 - 7 முக மணிகள்
விருச்சிகம் செவ்வாய்     குரு/சுக்கி 3, 5, 7 முக மணிகள்
தனுசு குரு குரு/சூரியன்   5, 1, 12 முக மணிகள்
மகரம் சனி சனி/சுக்கி 7 - 6 முக மணிகள்
கும்பம் சனி சனி/சுக்கி 7 - 6 முக மணிகள்
மீனம் குரு குரு/செவ் 5 - 3 முக மணிகள்

ருத்திராக்ஷ மணிகளை பெண்களும் அணியலாம்

பெண்களின் தெய்வமாக விளங்கும் ஷ்ரீ ஆதிபராசக்தி தமுத்திலிருத்திராகளம் அணிந்திருப்பாள். திருவண்ணாமலை தல புராணத்தில் அருணாசல புராணம் என்ற அரிய நூலில் உண்ணாமுலை அம்மை காதில் ருத்திராக்ஷம் அணிந்து ஜெபம் செய்ததாக புராணம் கூறுகிறது. திருவானை காவல் ஷ்ரீ அகிளாண்டேஸ்வரி அட்சமணி அணிந்த தாகவும், அகிளாண்டநாயகி ஆராதணைபடலம் பாடல் 68ல் குறிப்பிட்டுள்ளது. பிரம்மக்கரியம், கிரஹஸ்தாஸ்ரமம். வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற ஆஸ்ரம வாழ்க்கை வாழ்ந்த பெண்கள் ருத்திராக்ஷ மணி அணிந்ததாக புராண வரலாறுகள் குறிப்பிட்டுள்ளது. இளம் வயதில் சிறிய ருத்திராக்ஷ மணி மாலைகளையும். வயது முதிர்ந்தவர்கள் பெரிய ருத்திராக்ஷ மணிகளையும் அணியலாம்.

தெய்வஸ்களும் ருத்திராக்ஷ மணி மாலை அணிந்தது பற்றிய குறிப்புகள்:
1. ஷ்ரீ விநாயகி பெருமான் திரும்புவைாயிற் புராணத்தில் விநாயகர் சருக்கம் என்ற படலத்தில் நான்காம் பாடலில் குறிப்பிட்டுள்ளது.
2. சிவபெருமான் திருவாரூர் தியாகராசலீலையின் மூன்றாம் பகுதியில் மானிட ரூபம் எடுத்து ருத்திராக்ஷம் அணிந்தார் என குறிப்பிட்டுள்ளது.
3. சக்தி திருவானை காவல் கோவில்புராணம். அகிலாண்டநாயகி ஆராதனை பாடல் (படலம்) 68வது பாடலில் குறிப்பிட்டுள்ளது.
4. ஷ்ரீ பிரம்மா விளத்தொட்டிப் புராணத்தில் பிரம்மன் பூஜை படலத்தில் பாடல் 14ல் குறிப்பிட்டுள்ளது.
5. ஷ்ரீ விஷ்ணு திருவானைக் காவல் புராணம் திருமால்விழி பாடு படலம் பாடல் 13ல் குறிப்பிட்டுள்ளது.
6. ஷ்ரீ சூரிய பகவான் திருபுனல்வாயில் புராணத்தில் தினபதி சுருக்கம் பாடல் 5ல் குறிப்பிட்டுள்ளது.
7. ஷ்ரீ சந்திரன் திருபுனல்வாயில் புராணத்தில் உடுபதி சுருக்கம் பாடல் 13ல் குறிப்பிட்டுள்ளது.
8. ஷ்ரீ பைரவர் விளத்தொட்டி புராணத்தில் வயிரவ பூஜைப்படலம் பாடல் 26ல் குறிப்பிட்டுள்ளது.
9. அஸ்காரகன் திருப்புனல்வாயிலின் புராணம் பார்மகண் என்ற சொல்லில் செவிவியம் கிரகத்தை குறித்து ருத்திராக்ஷம் அணிந்ததாக உள்ளது.
10. யமன் திருபுனல்வாயின் புராணம் ஜியமச்சுருக்கம் படலத்தில் பாடல் 66ல் குறிப்புள்ளது.
11. வாயு திருப்பைஞ்ஞீலி ஸ்தல புராணத்தில் வாயு பூஜை மகிமை படலத்தில் பாடல் 7ல் குறிப்புள்ளது.
12. ஷ்ரீ ராமர் தின் வான் மியுர் புராணம் இராமன் வரம்பெறும் படலம் பாடல் 19ல் குறிப்பிட்டுள்ளது.
  -

ருத்திராக்ஷ மாலை ஜபம் செய்யும் திசைகளின் பலன்கள்

திசைகள் பலன்கள்
1. இந்திர திசை (கிழக்கு) தினம் அனைத்தும் வகிய மனரும்
2. அக்கினி திசை (தென் கிழக்கு) பலவகை நோய் விட்டு விலகும்
3. யமன் திசை (தெற்கு) துன்பங்கள், தீமைகள் வரும்
4. திரு ருதி திசை (தென் மேற்கு) கொடிய வறுமை வாங்கும்
5. வருண திசை (மேற்கு) சேர்த்து வைத்த செல்வம் அழியும்
6. வாயு திசை (வட மேற்கு) பேய், பில்லி, தனியம் நம்மை விட்டு ஓடும்
7. குபேர திசை (வடக்கு) பொன், பொருள் கல்விபேறு சகல சம்பத்துகளும் சேரும்
8. ஈசான திசை (வட கிழக்கு)    முக்தி பேறு அடையணம்.
  
தெய்வங்களில் சிறந்தவர் பரமகிலுன். புருஷர்களில் சிறந்தவர் விஷ்ணு கிரஹங்களில் சிறந்தவர் நாயகி. பசுவில் சிறந்தது காமதேனு ருதிசையில் சிறந்தது உச்சை சிரவம் யானையில் சிறந்தது ஐராவதம் விருஷங்களில் சிறந்தது கற்பக விருக்ஷம் புற்களில் சிறந்தது அருகம்புல் வேதங்களில் சிறந்தது ரிக்வேதம் மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மத்திரம். மருந்துகளில் சிறந்தது அமிர்தம் உருவாகங்களில் சிறந்தது தஸ்தம். நபரத்தின்ஙகளில் சிறந்தது வைரம் அதுபோல மணி மாலைகளில் சிறந்தது ருத்திராக்ஷ மணி மாலையாகும்.

பவளம்

bksureshv@gmail.com


பவளம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBug64jcJQcXP7Kgdl506cjvwFyrDWo2VvJ5TTGajfvo1_ZLHDU7zSOWhkoVIqgsWJUqOYdd_LVwt5uMo0MCfv-UcEO-_iBuIwogb2OfLrLqMp5cNXRbh9Q7wnPkof80ENgK2HTL0E5p0j/s400/Anmegamalar-1A.jpg

பவளத்தை தெரியாத மனிதர்களே இல்லை. அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை பவளம் அனைவரின் வீட்டிலும் இருக்கும். பவளம் Whilse Coral என சொல்லப்படும். வெள்ளைப் பவளமும் உண்டு. அதே போல சிகப்பு, இளம் சிகப்பு, வெள்ளையும் சிவப்பும் கலந்த பலவகை பவளத்தை உபயோகிக்கலாம். இன்னும் சொல்லப்போனால் இரத்னிங்களிலேயே மருத்துவ குணம் கொண்டுள்ள இரத்தினம் பேசப்பட்டாலும் பவளமும் சேர்த்தே கொடுக்கப்பட்டுள்ளது. பவளத்தில் மஞ்சள் நிற காஸ்மிக் கதிர்களை வெளிவிடும். அக்கதிர்கள் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. என்னடா! சிவப்பு பவளத்திலிருந்து மஞ்சள் நிற காஸ்மிக் கதிர்கள் என்று நீங்களே பார்க்கலாம். முப்பட்டை கண்ணாடிக்குள் ஒரு Oringinal பவளத்தை வைத்து பார்க்கும்போது மஞ்சள் நிற கதிர்கள் வெளிவருவதை நீங்கள் பார்க்கலாம்.

பவளம் செவ்வாய் கிரகத்திற்கு உரியது. இந்த பவளத்தின் கடினத்தன்மை மூன்று. ஒளிவிலகல் 1.49 - 1.66 ஒப்படத்தி 2.68. எந்த வடிவத்திலும் பவளத்தை அணிந்து பலன் பெறலாம். பவளத்தில் விநாயகர் போன்ற பல உருவங்கள் அதனுடைய கடினத்தன்மை குறைவினால் அழகாக செதுக்கலாம். மிகவும் அழகாக பலன் தரும் பவளம் ஜப்பான் பவளம. அதேபோன்று பவளத்தின் பின்புறம் அதனுடைய வேர்கள் இருக்கும். பவளம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஜாதக ரீதியாகவோ அல்லது மருத்துவ ரீதியாகவோ பவளம் அணிபவர்கள் வேறுடன் கூடிய பவளத்தையே அணிய வேண்டும். பவளத்தை அணியும்பொழுது தனக்குள் இருக்கும் கோழைத்தனம் மறையும். எதையும் தாங்கும் சக்தி பிறக்கும். தொடர்ந்து ஒரு காரியத்திற்கு போராடும்போது வெற்றி நிச்சயமில்லையா, இங்கு தொடர்ந்து என்ற வார்த்தைக்கு பவளத்தை அணியும்போது பலன் கிடைக்கும்.

விடாமுயற்சிக்கு பவளம் என்றுமே கூறலாம். அக்காலத்திலேயே அதாவது ராஜராஜச்சோழன் காலத்திலேயே அனைத்து நகை வியாபாரிகளும் பவள மோதிரத்தின் குண நலன்களை அவரால் அணியப்பெற்று அனைத்துப் பெண்களும் கண்டிப்பாக பவள அணிய வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக வரலாற்று நூல்களில் உள்ளதை நாம் காணலாம். அக்காலத்தில் இருந்து தான் அனைத்து கொல்லர்கள் பின்பு நகை கடைகள் போன்ற அனைத்து இடங்களிலுமே இன்றுவரை பவள மோதிரங்கள் விற்பதை நாம் காணலாம்.

பவளம் எந்த ராசி, நட்சத்திரம், லக்னம், திசை, புத்தி, கோச்சாரம் எதுவாயினும் பவளம் அணியலாம். மேலும் எந்த உலோகத்தில் வேண்டுமானாலும் அணியலாம். மேலும் மாங்கல்ய பலம் கொடுக்கக் கூடிய ஒரே இரத்தினம் பவளமே ஆகும். அதை தாலிப்பவளம் என்று கூறுவோம். அக்காலத்திலிருந்து இக்காலம் வரை தாலிப்பவளம் இரண்டாகத்தான் அணிய வேண்டும். ஒரு பெண் மகள் தன் திருமணத்திற்கு பிறகு பல விஷயத்தில் தன்னை மாற்றிக் கொண்டே ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

தன் தாய் வீட்டிற்கும், மாமியார் வீட்டிற்கும் வேறுபாடுகள் எந்த குடும்பத்திலும் உண்டு. (உணவு முறையிலிருந்து) அதை அனைத்தையும் ஒரு பெண்மகள் தான் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பல விஷயங்களில் உடனே சீர் பெற இப்பவளம் மிகவும் உதவியாக இருக்கின்றது.

ஒரு குழந்தை பிறந்த உடன் Oringinal பளவத்தை அந்தக் குழந்தையின் உதட்டில், தினமும் குளிப்பாட்டிய பிறகு பலமுறை தடவிக்கொண்டே வரும்பொழுது உதடுகள் நல்ல கலர் பெறுவதுடன், Shining கிடைப்பதை கண்ணால் பார்க்க முடியும். பவளம் கரையும் தன்மை உடையது. நீங்கள் அணியும் சைசுக்கு ஏற்ப உங்கள் உடல் உஷ்ணத்திற்கு ஏற்ப பவளம் கரையும்பொழுது அதை மாற்ற வேண்டும்.

செவ்வாய் ஜாதகத்தில் வலு குறைந்தோ அல்லது சீரான வலுவை கொடுக்க இயலாத தருவாயில் இருக்கும்பொழுதோ, வயிறு சம்பந்தமாக அடிக்கடி கோளாறு இருப்பவர்களோ, எதிர்ப்பு சக்தி குறைந்த ஜாதகரோ, தொடர்ந்து ஒரு வேலை செய்ய தடுமாறுபவர்களாகவோ, அடிக்கடி தோல் சம்பந்தமான உபாதைகளை அனுபவிப்பவர்களாகவோ, அஜீரணக்கோளாறு உடையவர்களாகவோ, நரம்பு சம்பந்தமான தளர்ச்சி ஏற்படுபவர்கள் இப்பவளத்தை தேவைப்படும் கேரட்டில் தன் ஜாதக ரீதியாக ஆராய்ந்து தனக்கு தேவைப்படும் உலோகத்தில் உரிய முறையில் பதிக்கப்பட்டு Cleansing செய்த பிறகு செவ்வாய் கிழமையில், செவ்வாய் ஹோரையில் ஆரம்பிக்கும்பொழுது கண்கூடா பலன் கிடைக்கும்.

டர்காய்ஸ்

bksureshv@gmail.com


டர்காய்ஸ்


http://www.bruce-moffitt-jewelry.com/images/c-ensemble-turquoise.jpg

டர்காய்ஸ் என்பது உப இரத்தின வகையைச் சார்ந்தது. பலர் இந்த இரத்தினத்தைப் பற்றி அறிந்திருப்பர்.  பழங்காலத்தி லிருந்தே இந்த இரத்தினத்தை மாலையாகவோ, ஆரமாகவோ, வளையலாகவோ, ஒட்டியாணத் தில் பதித்தோ அணியும் வழக்கம் இருந்துவந்திருக்கிறது. இது பச்சையும், நீலமும் சேர்ந்த ஒரு அழகான நிறத்தைக் கொண்டிருக் கும். இதை யார் வேண்டுமானா லும் அணியலாம். தீய பலன் களைக் கொடுப்பதற்கு இந்த இரத்தினத்திற்கே சக்தி இல்லை.

இந்த இரத்தினத்தின் உருவ அமைப்பு ஜொலிப்புத் தன்மையை இழந்திருந்தாலும் தனி அழகைப் பெற்றிருக்கும். இதை ஒருவர் அணியும் தறுவாயில் மற் றவர் கண்ணை கண்டிப்பாகத் தன்வயப்படுத்தும். இதில் ஈரா னிய டர்காய்ஸ்களுக்கு மிகுந்த வரவேற்புள்ளது. ஆனால் இந்த ஈரானிய டர்காய்ஸில் கருப்புக் கோடுகள், கருப்பு ரேகைகள், திட்டுத் திட்டான கருப்புப் படிமங்கள் அதன்மேல் படிந்திருக் கும். இவை காலங்காலமாக, ஈரான் நாட்டில் தான் கிடைக்கி றது. ஆனால் தற்போது கற்கள் குறைந்து விட்டதால் இதன் விலை, கலிபோர்னியா, அரிசோனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கிடைக்கும் டர் காய்ஸை விட அதிக விலை மதிப்புள்ளதாக இருக்கிறது.

முதன் முதலில் துருக்கியர்களே இதை அதிகம் பயன் படுத்தியதால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே Tourquise என்று பெயரிட்டு அணிந்து பயன் பெற்றதாகப் பல வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கற்கள் நிறம் மாறும் தன்மையைக் கொண்டது. சமயத்தில் தன் நிறத்தை இழந்து வெளுத் தும் விடும். இந்தக் குறைபாட்டினால், இந்த அழகான டர்காய்ஸை அழகுக் கலைப் பொருளாக வும், ஆபரணங்களுக் காகவும் மட்டுமே பலர் பயன்படுத்து கின்றனர்.

இதில் அலுமினியம், பாஸ்பாரிக் ஆசிட், கொப்பர் ஒக்ஸைட், தண்ணீர் போன்ற பல தாதுப் பொருட்கள் உள்ள டங்கியிருக்கின்றன. இதன் கடின தன்மை  5 முதல் 6 வரை ஆகும். ஒப்படர்த்தி 2.7 ஆகும். இதன் ஒளிவிலகல் 1.61 என்பதாகும்.

இந்த இரத்தினத்தை குருவுக்காகவும், சனிக்காகவும், சூரியனுக்காகவும், கனக புஷ்பராகம், நீலம், மாணிக்கம் போன்ற மூன்று இரத்தினத்திற்கு பதிலாகவும் அவ ரவர் ஜாதகத்தை ஆராய்ந்தபின் அணி யலாம். இங்கு டர்காய்ஸ் ஒரு உபரத்தினம் மட்டுமே என்பதை நீங்கள் ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும். மாணிக்கம், கனக புஷ்பராகம், நீலம் போன்ற நவரத் தினக்கற்களுக்கு சமமான சக்தி டர்காய்ஸில் கண்டிப்பாக இராது. மேலும் 1, 3, 6, 8, 10, 12, 15, 17, 19, 21, 24, 26, 28, 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களும், கூட்டு எண்ணாக 1,3,6,8 வருபவர்களும் இந்த இரத்தி னத்தை அணிந்து நன்மைகளை அடையலாம்.

இந்த இரத்தினத்தை அணிந்து மருத் துவரீதியாகப் பலன் பெற்றிருப்பவர் பலர். முக்கியமாக தொண்டை பிரச்சினைகள், இளமைக் குறைவு, வசீகர சக்தி மந்தமாதல், சூட்டினால் ஏற்படும் சிரமங்கள், ஈரல் கோளாறுகள், அதிக சோர்வு இவற்றினால் பிரச்சினைகளுக் குள்ளாகும் எந்த ஜாதகராக இருந்தாலும், எந்த ராசி, எந்த நட்சத்திரம், எந்த லக்னம், கோச்சாரம், திசா புத்தியாக இருந்தாலும் இதை அணியலாம்.

இந்த இரத்தினத்தை தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற எந்த உலோகத்திலும் பதித்து அணியலாம். மூன்று கேரட்டுக்கு மேல் இருந்தால் சிறப்பு. மோதிரத்திற்குப் பின்னால் திறப்பு வைத்தே அணிய வேண்டும். இந்த இரத்தினத்திற்கு மறுபக்கம் பாறை வடிவில் காணப்படும்.

இந்த இரத்தினத்தை உரிய முறையில் பதித்து அணிவதற்குத் தயாராக இருக்கும் நிலையில் சுத்தப்படுத்திய பின்னரே பலன் கிடைக்கும். இல்லையேல் இது அழகுக்கு மட்டும் பயன் படுத்தும் கல் போன்றே விளங்கும்.

பூமியில் கடவுளால், இயற்கையினால் உருவாக் கப்பட்ட பொருட்கள் பல. அதில் ஒன்று தான் இரத் தினங்கள்.

இரத்தினங்களின் சக்தியை அக்காலத்திலேயே நம் முன்னோர்கள் உணர்ந்து நமக்காகத் தந்துள் ளனர். அவற்றை முறைப்படி தெரிந்து, அறிந்து உபயோகிக்கும்போது பலன் நிச்சயம் என்பதை அணிந்தவர்கள் உணர்ந்திருப்பதை போல நீங்க ளும் அறிந்து பலன் பெறுவீர்களாக.

அமிதிஷ்ட்

bksureshv@gmail.com


அமிதிஷ்ட்

http://www.bananaverse.com/wp-content/uploads/2009/01/cisco_sc_con_002.jpg

அமிதிஷ்ட் என்ற இரத்தினத்தை தமிழில் `செவ்வந்திக்கல்' என்பர். இதனுடைய நிறம் Purple (செவ்வந்தி). இது சிலிகா என்னும் Chemical Groupஐ சார்ந்தது. இதன் உருவம் ஸ்படிக உருவ அமைப்பில் இருக்கும். இது metamafic ரக பாறைகளில் இருக்கும்.

ஆறு பட்டைகள் கொண்ட வடிவத்தில் இருக் கும். மங்கலான கற்களிலிருந்து தெள்ளத்தெளி வான கற்கள் வரை இருக்கும். பூமியில் நிறைய இருப்பதினால் இது அனைவரும் வாங்கக் கூடிய அளவிலேயே இருக்கும். இதனுடைய விளைச்சல், தரம் இவற்றைக் கொண்டுதான் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அதிக ஒளி ஈர்ப்பு உள்ள கற்கள் அதிக விலையிலும், மந்தமாகவும், நிறம் குறைவாக வும் உள்ள கற்கள் விலை குறைவாகவும் இருக் கும். இது குஞுட்டி Semi Precious (உப ரத்தினம்) வகை யைச் சார்ந்தது. யார் வேண்டுமானாலும் அணிய லாம்.
ஒருவரின் ராசி, லக்னம், நட்சத்திரம் எதுவாக இருந்தாலும் இந்த Amethyst டை அணியலாம். Amethyst சுத்தமாக உள்ளதா என்பதை மட்டும் பார்த்தால் போதும்.

Amethyst டை சிறு குழந்தை முதல் முதியவர் வரை எந்த அளவிலும் அணியலாம். எந்த உருவ அமைப்பிலும் Amethyst டை அணியலாம். இந்த உலோகத்தில்தான் பதிக்கப்பட வேண்டும் என்ற எந்தக் கோட்பாடும் கிடையாது.

மேலும் கனக புஷ்பராகம் அணிய வேண்டும் என்று நினைப்பவர்கள், அதை அணிய இயலாத போது, இந்த Amethyst மாற்று இரத்தினமாக அணியலாம்.

3ஆம் எண் சார்ந்தவர்கள் Amethystடை அதி கப்படியாக உபயோகிக்கலாம். Amethyst இரத்தி னங்களாக மட்டும் இல்லாமல் மாலை வடிவங் களாகவும் கிடைக்கிறது.

இந்த மாலை வடிவங்களில் கிடைக்கும் Amethyst பெரும்பாலும் 3rd qualityக்கு கீழ் உள்ள வகையில்தான் கிடைக்கும்.

அதை அணியும்போது அழகுபடுத்த மட் டுமே உதவும். மேலும் Amethyst பிரமிட் உரு விலும், Cristal Pencil வடிவிலும் கிடைக் கும். ரெய்கிற்காக இதை பலர் உபயோ கிக்கின்றனர்.

Amethystன் பலாபலன்கள்:

ஒருவர் Amethystடை அணியும்போது மனதில் சந்தோஷம் இருக்கும். கெட்ட எண் ணங்கள் விட்டு விலகும். மனத்தெளிவு பெறுவர். குழப்பங்களிலிருந்து விடுபடுவர்.

Amethystøhடை வீட்டில் வைக்கும்போது நல்ல அதிர்வுகளை வீட்டில் இருப்பவர்களால்  உணரமுடியும். உதாரணமாக, ஒருவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தில் படுத்த படுக்கை யாக இருந்தால் அந்த அறையினுள் செல்லும் போது ஒரு வகையான இறுக்கம் இருக்கலாம். அந்த இடங்களில் இந்த Amethyst பிரமிட்டை யோ, Amethyst பென்சிலையோ நன்றாகச் சுத்தி கரித்தபின் அங்கு வைத்தால் அந்தச் சூழ்நிலை மாறுவதை உணர முடியும்.

குரு கிரகத்தின் ஒளிக்கதிர்கள் யாரெல்லாம் ஜாதக ரீதியாகப் பெற வேண்டும் என்றுள்ளதோ அவர்களெல்லாம் சரியான அளவில் Amethyst அணியும் போது பலன் நிச்சயம் கிடைக்கும். Amethyst வேறு கற்களுடன் சேர்ந்து அணியும் போது அதை அழகுக்கு மட்டுமே பயன்படுத்தப் பட வேண்டும்.

அதாவது, Amethyst, வைரம், மாணிக்கம் போன்றவற்றைச் சேர்த்துச் செய்த ஆபர ணங்களை விருந்துபசாரங் களின் போது அழகு சேர்க் கப் பயன்படுத்தலாமே அன்றி, ராசிக்காக இவ்வாறு கலந்து அணியக் கூடாது.

அழகுக்காக அணியும் Amethyst பதித்த ஆப ரணங்களை யார் வேண்டுமானாலும் மாற்றி அணியலாம். ஆனால் Amethyst மட்டும் பதித்த மோதிரத்தையோ, டொலரையோ, தினமும் ஒரு வர் அணியும் தறுவாயில் அதை மற்றவர் மாற்றி அணியக் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு அதி ர்வு இருக்கும். அதற்குத் தக்கவாறு Amethyst சீர் பெற்று தன் வேலையை செய்யும். அதை மற்றவர் அணியும்போது அந்த அதிர்வுகள் மாறுபடுவ தினால் பலன் கிடைக்காது. Amethyst அணியும் முன் அதற்கான முறையில் சுத்தப்படுத்திய பின் னரே அணிய வேண்டும். சுத்தப்படுத்திய பின் அதன் அதிர்வுகள் சீர்பெறும்.  அவ்வாறு முழு மையாக சுத்தப்படுத்திய பின் தான் முழுபலன் கிடைக்கும்.

ஸ்படிகம்

bksureshv@gmail.com


இரத்தின களஞ்சியம்
ஸ்படிகம்


http://www.minerough.com/Images/Products/Quartz-cut/Quartz-mix.jpg

இந்த மாதம் ஸ்படிகங்கள் பற்றிப் பார்க்கலாம். மிக அற்புதமான கல் ஸ்படிகம். இதை Quartz என்பர். இதன் நிறங்கள் பல என்றாலும் அதிகமாகக் கிடைக்கும் நிறங்கள் வெள்ளை, மென்சிவப்பு, ரோஜா போன்றவை. ஸ்படிகத்தைத் தொடும்போது ஜில்லென்று உணரலாம். விலை மிகவும் குறைவுதான். சிறிய உருவத்தில் இருக்கும் ஸ்படிகங்களை பாறைகளாகப் பார்க்கும் போது கற்கண்டுகளை நெருக்கமாக ஒட்டியது போல் காணப்படும்.

ஸ்படிகப் பாறைகளை அனைவரினதும் கண் பார்வை படுமாறு வைக்கும் போது அந்த இடத்தின் தன்மை மிகவும் சாந்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். ஸ்படிகத்தை எந்த வடிவில் வைத்திருந்தாலும் வாரம் இரு முறை யாவது தண்ணீருக்குள் அந்த ஸ்படிகத்தைக் குறைந்தது 4 மணி நேரம் ஊறவிடவேண்டும், பின்பு அதை அதன் இடத்திலேயே வைக்கலாம். அதை அபிஷேக முறையிலும் செய்யலாம். ஸ்படிகப் பாறைகள் வாங் கும்போது விஸ்திரண வடிவில் இருக்க வேண்டும். குறுகிய துறுப்பு உள்ளதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் மேஜையில் வைத்தால் கவனம் ஒருமுகப்படும்.

ஸ்படிகப் பென்சிலை யார் வேண்டுமானாலும் டொலராக உபயோகிக்கலாம். பிரமிட் வடிவ ஸ்படிகம் இரட்டிப்பு சக்தி பெற்றிருக்கும். ஸ்படிகப் பந்து அல்லது முட்டை வடிவில் உள்ள ஸ்படிகத்தை வீடு மற் றும் தொழில் செய்யும் இடங்களில், வெயில் படும் வாயிலில் மாட்டினால் சண்டை, சச்சரவு உள்ள வீடு கூட அமைதிபெறும். ஸ்படிகத்தை மாட்டும்போது அசையக்கூடியவாறு (உதாரணம்: நூலில்) மாட்ட வேண்டும்.

ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதே சங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமா னாலும் அணியலாம்.

ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்ப டிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூ டாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான். காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.

இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல் லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம். வீட் டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். இவ்வளவு அற்புத மான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.

ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மெகரு. இந்த மெகரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படி கத்தை யானை வடிவில் வைக்கும்போது லஷ்மி கடாட்சம் வரும். இவ்வளவு அற்புதங்கள் அடங் கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்களாக.

Reiki Miracle Healing Method

bksureshv@gmail.com



உலகில் எதை எதையோ அதிசயங்கள் என்று சொல்லி உள்ளார்கள். விஞ்ஞானிகளும் அணுசக்தி, மின்சக்திகளைப் பற்றிக் கண்டுபிடித்தார்கள். ஆனாலும் இவற்றையெல்லாம் விட மனிதனுக்குள்ளே மறைந்திருக்கும் ஆற்றல் மிக்க மகா சக்தி தான் எவ்வளவு அற்புதமானது. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ஆனாலும் அந்தச் சாதனைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது மனிதனுக்குள்ளே மறைந்திருக்கும் ஆற்றல் மிக்க மகாசக்தி தான் எவ்வளவு அற்புதமானது. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ஆனாலும் அந்த சாதனைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது மனிதனுக்குள்ளே மறைந்திருக்கும் மாபெரும் சக்தி தான். இதையே சுவாமி விவேகானந்தரும் உன்னிடம் எல்லா ஆற்றல்களும் குடி கொண்டிருக்கின்றன என்றார். இந்த ஆற்றலைத் தெரிந்து கொண்டவர்கள் மட்டுமே காந்த சக்தி படைத்தவர்களாக இருந்து வெற்றியை அடைகிறார்கள். இதைப் பற்றித் தெரியாதவர்கள் வாழ்க்கையில் தோல்வியைத் தான் அடைய முடியும். மனதின் எல்லையற்ற ஆற்றல்களைத் தெரிந்து அதைச் செயலாற்ற எவ்வளவோ பயிற்சி முறைகள் உள்ளன. அதிலே ரெய்கி பயிற்சி மிகவும் அற்புதமானது என்றே சொல்லலாம். நமது இருபெரும் காவியங்களில் கதையோடு நிறையக் கிளைக் கதைகள் புகுத்தி அதன் மூலமாக வாழ்க்கைக்குத் தேவையான தத்துவ விளக்கத்தை அதாவது உட்கருத்தை வைத்துப் படைத்தார்கள். அது போல நானும் ரெய்கியோடு பல கருத்துகளையும் நல்விஷயங்களையும் வைக்கிறேன். வாழ்க்கையை நெறிப்படுத்திச் செம்மையாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
நம் பெரியோர்கள் மனிதனை எப்படியெல்லாம் உவமைப்படுத்தி உள்ளார்கள் என்று பார்க்கலாம். திருமூலர் `உடம்போ ஆலயம், உள்ளமே பெருங்கோயில் வாய் கோபுர வாசல்' என்றார். ஔவைப் பிராட்டியாரும் `அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்' என்று எவ்வளவு உயர்வுபடுத்தி உள்ளார்.
"அஹம் பிரமாஸ்மி :" உள்ளே பிரம்மாய் இருக்கிறேன்.
"எனக்குள் கடவுள் இருக்கிறார்."
"த்த்வமஸி" (நீயும் நானும் ஒன்றே)
"த்வம் ஏவ ஸர்வம்" (எல்லாம் ஒன்றே)
"நா சச்சிதானந்த ஸ்வரூபம்" (எனக்குள் எல்லாம் அடக்கம்)
"நான் ஒரு ஆத்மா" - என்று வடமொழி நூல்கள், மனிதனை உயர்வாகக் கூறிப்போற்றியுள்ளன.
ஆத்மாவானது பல பிறவிகளில் இருந்து மாறி, மனித ஆத்மாவாக பூமியில் வருவதே உயர்ந்த பிறவியாகும். பிற உயிரினங்களிலிருந்து மனிதன் மாறுபட்ட அமைப்பு உடையவன். ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரை, அனைவரிடத்திலும் இறைவன்குடி கொண்டிருக்கின்றான். அதனால் தான் பெரியோர்களும் மனிதனும் கடவுளாகலாம் என்றுச் சொல்லி உள்ளார்கள். இப்படி ஒவ்வொருவருக்குள்ளும், கடவுள் குடி கொண்டிருப்பதால் "ஒவ்வொருவரும் கடவுள் தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும்", என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியிருக்கும்போது தான் பிரச்சனைகள் இல்லாமல் இருக்க முடியும். அதாவது தூய்மையான எண்ணங்களையே எண்ணுவது, நல்ல செயல்களையே செய்வது, போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இதையே இன்னும் சிறிது ஆழமாகப் பார்த்தால் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகளாவன, இயமம், நியமம், பிராணாயாமம், ஆசனம்
(யோகா) பிரத்யாஹாரம், தாரண, தியானம், சாந்தி போன்றவைகளாகும் இவற்றை விரிவாகப் பார்க்கலாம்.
இயமம்: தீயவைகளை விட்டொழித்தல், மனதைக் கட்டுக்குள் வைத்தல் இவற்றையே செய்ய வேண்டும். கொலை, களவு, திருட்டு, கடுஞ்சொல் கூறுதல், புறங்கூறுதல், பிற உயிர்களைத் துன்புறுத்தல் இவையெல்லாம் செய்யாமலிருத்தல் வேண்டும். அதாவது எப்பொழுதும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் நேர்மறையாகச் செயல்பட வேண்டும்.
நியமம்: நல்லவைகளையே தேடித் தேடிச் செய்தல், (கிரியை என்றும் சொல்லலாம்), உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல், உண்மையே பேசுதல், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல், புலன்களை அடக்குதல், திருப்தி அடைதல் அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்தல், ஆன்மிகச் சம்பந்தப்பட்ட நூல்களை படித்தல்.
ஆசனம்: உடம்பைப் பல நிலைகளில் வளைத்துப் பயிற்சி செய்தல், இவ்வுலகிலே யோகா செய்பவர்களை வானுலகில் தேவர்கள் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க வரவேற்று காத்து நிற்பர் என்று மிகைப்படுத்தி உள்ளார்கள்.
பிரணாயாமம்: உயிர்மூச்சை ஒழுங்காக நடத்துதல், மூச்சு சம்பந்தமான பயிற்சி.
பிரத்யாஹாரம்: வேண்டாத காரியங்களைத் தவிர்த்து, வேண்டிய காரியங்களைத் தெரிந்து கொள்வது, மனதைப் பிறபொருளிடம் சொல்லாது நிறுத்துதல்.
தாரணை: மனைதை கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்துதல்.
தியானம்: மனதை ஒரே நிலையில் நிற்கச் செய்தல்.
சாந்தி: அமைதியான உறக்க நிலை என்று சொல்லலாம்.
இந்த எட்டு நிலைகளையும் நாம் கடைப் பிடித்தோமானால் வாழ்க்கை சுபிட்சமாகவும் சீராகவும் போகும் மேலும் இதன் உட்கருத்து என்னவென்றால் ஒவ்வொரு மனிதனும் தீயவைகளை விட்டொழித்து நல்லவைகளையே செய்து மனதை ஒருமுகப்படுத்தித் தியானத்திலே உட்காரும் போது தான், சூழ்நிலையில் என்ன நினைக்கிறானோ  அது அவர்களுக்குக் கைகூடும் என்பது சூட்சுமமான உண்மையாகும். இப்படி ஒவ்வொருவரும் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்ட ரெய்கியின் உள்ளே செல்லும் போது மிகவும் அற்புதமாக வேலை செய்யும் என்று சொல்லாம். நாம் இப்போது 1. ரெய்கி என்றால் என்ன? 2. அதன் முழு அர்த்தம் என்ன? 3. அதன் வரலாறு என்ன? 4. ரெய்கி எங்கிருந்து போய் எப்படி வந்தது? 5. ஒவ்வொருவருக்கும் அந்த சக்தி எப்படிக் கிடைக்கிறது. 6. அந்தச் சக்தியை எப்படி இயங்க வைப்பது. 7. தனக்கு தானே எப்படிச் சிகிச்சை செய்து கொள்வது. 8. அடுத்தவர்களுக்கும் எப்படிச் சிகிச்சை அளிப்பது. 9. கணவன் மனைவி அன்பை அதிகரிக்கச் செய்வது. 10. தொலை தூரச் சிகிச்சையின் சிறப்பம்சங்கள். 11. பாதுகாப்பு கவசம். 12. இடம், அலுவலகம், தூய்மைப்படுத்திச் சக்தியூட்டுவது இதுபோன்ற பல சிறப்பம்சங்களும், அதோடு கூட எனக்குள் ரெய்கி அனுபவங்களும், மற்றவர்களுக்கு, ரெய்கி கொடுத்ததால் ஏற்பட்ட அனுபவங்களும், ரெய்கி படித்தவர்களுடைய அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் - பிண்டத்தில் உள்ளது அண்டத்தில். வெளியே இருப்பது உள்ளேயும் இருக்கிறது, உள்ளே இருப்பதே வெளியேயும் இருக்கிறது.
பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தெரியாத எண்ணிடலங்காச் சக்திகள் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவைகள் நம் கண்ணுக்குப் புலப்படாது. நம்மால் பார்க்க முடியாது என்பதற்காக அவைகள் இல்லையென்று ஆகிவிடாது. அதேபோல பிரபஞ்சத்தில் என்னென்ன சக்திகள் இருக்கிறதோ அவைகளெல்லாம் மனிதனுக்குள்ளேயும் இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் பஞ்சபூத சக்திகள், நவகிரகங்களின் தொடர்பு, சூரிய நாடி, சந்திர நாடி இன்னும் பல சக்திகள் உள்ளன. எப்போதும் ஒரு சக்தி தனித்து இயங்காது. ஒரு சக்தியோடு மற்றொரு சக்தியை இணைக்கும் போது அந்த சக்தி இயங்க ஆரம்பிக்கும் அதாவது பிரபஞ்ச சக்தியை  மனித சக்தியோடு இணைக்கும் போது ரெய்கி சக்தி கிடைக்கும். குரு மூலமாகத்தான் தீட்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ரெய்கி - இயற்கை பிரபஞ்ச காந்த சக்தி என்பதாகும்
ரெய்கி  இயற்கை பிரபஞ்சம்
கி   இறைசக்தி (காந்த சக்தி)
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே 18 சித்தர்கள் மகான்கள், அவதார புருஷர்கள் இவர்களெல்லாம் நிறைய அதிசயங்களும் அற்புதங்களும் செய்து மறைந்தார்கள். விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் எல்லாவற்றையும் அவர்கள் அன்றே ஞானதிருஷ்டியில் தெரிந்து பார்த்து சிலவற்றை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்தார்கள். ஆனால் அவைகள் சரியான முறையில் பயன்படுத்தாதலாலும், பல உள்ளர்த்தங்கள் கூடியதாக இருந்ததாலும், மேலும் அவைகளில் சில மண்ணோடு மண்ணாகிப் போனதாலும் தான், இந்தியா பின் தங்கி இருப்பதாகவும் சொல்லுகிறார்கள். சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் இந்தியா மிகப்பெரிய வல்லரசு நாடாக இருந்திருக்கும் எனவும் சொல்லி உள்ளார்கள். இந்தியாவிலிருந்து (அணஞிடிஞுணணா டஞுச்டூடிணஞ்) தான் இந்த முறைகளெல்லாம் ஜப்பானுக்கு போய் அங்கிருந்து
ரெய்கி என்ற பெயரோடு வந்து உள்ளது.
ஒரு சில சித்தர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்.
1. இராமலிங்க வள்ளலார் நீரிலே விளக்கேற்றியவர். அவர் ஏற்றிய ஜோதியும் அணையாத அடுப்பும் இன்றளவும் பிரசித்தி பெற்றது. அவர் ஜோதிமயமாகவே மறைந்தவர்.
2. திருமூலர் 3000 வருடங்கள் வாழ்ந்ததாகவும், 3000 பாடல்கள் எழுதியதாகவும் வரலாறு.
3. சீரடி சாய்பாபாவும் நிறைய அற்புதங்கள் செய்தவர்.
4. போகர் என்ற சித்தர் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து, மூலிகைகளால் பழநி முருகனை அமைத்தவர்.
5. மூலிகைகளைக் கண்டுபிடித்து, அதை மருத்துவ ரீதியாகக் கொடுத்ததும் சித்தர்கள் தான். இவர்கள் எல்லாம் உலக மக்களுக்கு நன்மை செய்தார்கள்.
நாமெல்லாம் இந்த அளவுக்கு இல்லாவிட்டால் கூட நமக்கு நாமே நல்லவர்களாகவும் குறைந்த பட்சம் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்காவது நல்லது செய்து ஆரோக்கியமாக இருக்கலாமே. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனிதர்களிலே மூன்று நிலைகளில் இருப்பவர்கள் உள்ளார்கள். விலங்குநிலை - மனிதநிலை - தெய்வநிலை.
விலங்குநிலை: தன்னையும் கெடுத்து பிறரையும் கெடுப்பது.
மனித நிலை: தன்னைப்பற்றி மட்டும் நினைத்து, பிறரைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பது.
தெய்வநிலை: தானும் நன்றாக வாழ்ந்து, பிறரும் நன்றாக வாழ்வதற்குண்டான உதவிகள் செய்து, உலக மக்களுக்கும் நன்மை செய்து வாழ்பவர்கள் தெய்வநிலைக்கு ஒப்பானவர்கள்.
தெய்வ நிலையில் இல்லாவிட்டாலும் கூட, விலங்கு நிலைக்கு போகாமலும் குறைந்த பட்சம்  மனித நிலையில் இருந்தால் கூட வீடும் நாடும் ஓரளவுக்குச் சுபிட்சமாக இருக்கும்.
மக்கள் நிறைய நல்ல விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் சோம்பலும், அறியாமையும் ஆகும்.
சோம்பல் அறியாமை புகுந்த கூட்டில்.
யாரும் அறியாமல் ஊறுமே நோய்
நல்ல விஷயங்களை நிறைய பேர் ஏற்றுக்கொள்ள முன்வராததே பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கிறது.
ரெய்கி வரலாறு பற்றிக் காண்போம்: `ஈணூ. மிகாவ் உசுயி' என்பவர் ரெய்கி குரு ஆவார். இவர் திபெத்திய ஞானி, இவர் காலையில் பைபிள் வாசிப்பார். பகல் நேரத்தில் கல்லூரியில் வேலை செய்வார். மாலையில் மக்களுக்கு மருந்து மாத்திரை கொடுப்பார். இந்நேரத்தில் அவரிடம் படிக்கும் மாணவர்கள் ஒரு நாள் கேள்வி விடுக்கிறார்கள்.
காலை பைபிள் படித்துவிட்டு மாலை ஏன் மருந்து கொடுக்கிறீர்கள். பைபிளில் ஏசுகிறிஸ்து தொடுதல் சிகிச்சை முறை மூலமாக பலநோய்களைக் குணமாக்கியுள்ளாரே அவரைப் போல நீங்கள் ஏன் செய்யக் கூடாது என்று கேட்டார்கள். அவர் உடனே தன் வேலையை ராஜினாமா செய்து விட்டுத் தொடுதல் சிகிச்சை முறைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். ஜப்பானிலும் அமெரிக்காவிலும் 21 வருடங்கள் ஆராய்ச்சி நடந்தது. ஆனாலும் விடை கிடைக்கவில்லை. ஒரு புத்தபிட்சு இந்தியாவிற்குப் போய்ப் பாருங்கள். உங்கள் ஆராய்ச்சிக்கு விடை கிடைக்கும் என்று கூறினார். அவர் இந்திய வந்து சமஸ்கிருத மொழி பயின்று நிறைய ஓலைச்சுவடிகளைப் படித்தார். அதில் புத்தருடைய சுவடுகளில் அவருக்கு விடை கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு அவர்கள் ஜப்பான் சென்றார்கள்.
பிறகு அவர் அங்கு `சூரியோமா' என்னும் மலையில் "ஓதூணிணாச்" என்னுமிடத்தில் 2 நாள் தியானத்தில் அமர்ந்தார். 21 நாள் முடியும் கடைசி நேரத்தில் ஆகாயத்திலிருந்து இடி மின்னலுடன் கூடிய சக்தி மிகுந்த பேரொளி அவரை நோக்கி வந்தது. அந்த சக்தியானது அவரது  மூன்றாம் கண் (புருவ மத்தி) என்னுமிடத்திற்குச் சென்றது. அப்பொழுது அவரது உடல் சுருங்கி உள்ளம் விரிவடைவதை அவர் உணர்ந்தார். அவருக்கு அப்பொழுது புத்துணர்ச்சியும் கிடைத்தது. பிறகு கண்ணைத் திறந்து பார்க்கையில் வானத்தில் வானவில் நிறங்களைப் பார்த்தார். அதன் உள்ளே ரெய்கி மந்திரங்களைக் காட்சியாகப் பார்த்தார். அப்பொழுது அவருக்கு அசரீ ஒலியும் கிடைத்தது.
பிறகு என்ன நடந்திருக்குமென அடுத்த இதழில் பார்க்கலாம்.

அடுத்ததவருக்கு சக்தி அளித்தல் Heal to others


bksureshv@gmail.com


உசுயி அவர்கள் 21 வருட ஆராய்ச்சியின் பயனால்  அவர் கியோடர் என்னுமிடத்தில், சூரியோமா என்னும் மலையில்,  21 நாள் தியானம் செய்ததன் பலனாக ஆகாசத்திலிருந்தே அவருக்கு சக்தி கிடைத்தது.  அப்போது அவருடைய உடல் சுருங்கி, உள்ளம் விரிவடைவதை நன்கு உணர்ந்தார். கண்ணை திறந்து பார்த்ததும், ஆகாயத்தில் வானவில் கலரினுள் சங்கேத குறியீடுகளைப் பார்த்தார். அப்பொழுதே அசரீரி ஒலியும் அவருக்கு கிடைத்தது.  தியானத்தின் முழுப்பலனும் கிடைத்த திருப்தியில் (Physical Health, Mental Health, Emeretial Health)  அவர் மலையை விட்டு கீழே இறங்கினார்.  அப்போது ஒரு பெரிய கல் ஒன்று, அவருடைய கால் பெருவிரலை காயப்படுத்தியது.  அதோடு இரத்தமும் கொட்டிற்று. அவர் உடனே தன்னுடைய கையை, காயப்பட்ட விரலின் அருகே கொண்டு போனார்.  அந்த சமயம் தான் அவருக்குள் அற்புதம் நடந்தது.  அதாவது அவருடைய கைகளிலிருந்து சக்தி வெளிப்பட்டது.  அதனால் காயத்தின் வலியும் நின்றது.  இரத்தமும் நின்றது.  இது அவருக்கே கிடைத்த முதல் அனுபவமாக இருந்தது.  இந்த முறையைத் தான் தனக்கு தானே சுய சிகிச்சை அளித்தல் (Self Healing) என்று சொல்லாம்.

அடுத்ததவருக்கு சக்தி அளித்தல் Heal to others
மிகாவ் உசுயி அவர்கள். மலையை விட்டு முழுவதுமாக கீழே இறங்கியவுடன். 21 நாளாக விரதம் (fasting) இருந்ததால், ஒரு ஹோட்டலுக்குள் உணவு சாப்பிடச் சென்றார்.  அங்கே ஒரு சிறிய பெண் பல் வலியால் தாங்க முடியாத வேதனையில், அழுது துடித்துக் கொண்டிருந்தததைக் கண்டார்.  உடனே அந்தப் பெண்ணின் அருகே சென்று, தன் கைகளைக் கொண்டு சக்தியூட்டி வலியை குணப்படுத்தினார்.  அழுது கொண்டிருந்த அந்தப்பெண், வலி முழுவதும் நீங்கி, சிரித்துக்கொண்டு துள்ளி குதித்து வெளியே விளையாட சென்று விட்டது.  அவர் தன் உணவை முடித்துக்கொண்டு, ஹோட்டலை விட்டு வெளியே வந்தார்.  ரோட்டில் வயது முதிர்ந்த ஒரு பெரியவர் நடக்க முடியாமல் செல்வதைப் பார்த்தார்.  அவரருகே சென்று அவரை குணப்படுத்தினார். இன்னும் பலரை குணப்படுத்துவதற்கு சக்தியும் அவர் கைகூடி வரப்பெற்றதால், ஜப்பானில் ஆஞுஞ்ஞ்ஞுணூ ஞிடிணாதூ என்னுமிடத்தில் நிலையாக உட்கார்ந்து, பல வழிகளிலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை, ரெய்கி சக்தியினால் குணப்படுத்தி, நல்வழி காட்டினார்.  தன் வாழ்வின் கடைசி வரைக்கும் அவர் இதே போலவே செய்து, இறக்கும் தருவாய் சமயத்தில் டாக்டர்.  சுஜிரோ ஹயாஷி என்பவருக்கு இந்த இரகசிய பரிமாற்றம் செய்துவிட்டு அவர் மறைந்தார்.

மிகாவ் உசுயி ஏற்படுத்திய தத்துவங்கள்

bksureshv@gmail.com


மிகாவ் உசுயி ஏற்படுத்திய தத்துவங்கள் பற்றிக் காண்போம்.

Total Surrender - முழுமையான சரணாகதி
Inner outer purity - உள்ளும் புறமும் தூய்மை
Good cause - தூய்மையான எண்ணங்கள்
Strong intention - முழு ஈடுபாடு
strong belief - அதிக நம்பிக்கை வைத்தல்
on higher energy this is for super status happy & healthy & energetic & postive

இதுவே மிகாவ் உசுயி ஏற்படுத்திய ரெய்கி தத்துவங்கள் ஆகும். இவருக்கு பிறகு சுஜிரோ ஹயாஷி என்பவர் இவருடைய முறையை பின்பற்றி வந்தார். இந்த சமயத்தில் ஹவாயோ டகாடா என்னும் அமெரிக்கப் பெண்மணி, ஜப்பானில் திருமணம் முடித்து, 44 வருடத்துக்குப் பின் அவர் கணவர் விபத்தில் மறைய, அவர் பெரிய மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, உடம்பிலும் பல பிரச்சனைகளுக்கு ஆளானார். அப்பொழுது அவருக்கு 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். பல பிரச்சனைகளுக்கு தள்ளப்பட்டு பல வியாதிகளுக்கு உட்பட்டதால் ஆபரேஷன் நிலைக்கு தள்ளப்பட்டார். சர்க்கரை வியாதியும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.  அப்பொழுது அவருக்கு ஒரு கனவு ஏற்பட்டது. அதுவே உள் மனதில் எதிரொலித்தது. இந்த விஷயத்தை ஆபரேஷன் செய்யும் டாக்டரிடமும் சொன்னார். அவரும் இவருடைய உள் மனக்கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆபரேஷன் தவிர்த்து, சுஜிரோ ஹயாஷி என்பவரிடம் அனுப்பி ரெய்கி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுப்பினார். அங்கு பரிசோதனையில் அவருக்கு முற்றிய நிலையில் இருந்தததால் 4 மாதத்திற்கு ரெய்கி சிகிச்சை அளித்தார்கள். அவருக்கு மனப்பிரச்சனை, உடல்பிரச்சனை முழுவதும் நீங்கி ஆரோக்கிய பெண்மணியாக மாறினார். அப்பொழுது அவர் தீர்க்கமான ஒரு முடிவு எடுத்தார்.  இந்த ரெய்கி சக்தியால் நமக்கு கிடைத்த பலன் மாதிரி, உலக மக்கள் அனைவருக்கும் இது போய் சேர வேண்டும். இதனால் அனைவரும் ழுழுப்பலன் பெற்று ஆரோக்கியம், இன்பம் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணி, இக்கலையை தனக்கு சொல்லக் கொடுக்குமாறு நல்லெண்ணத்தோடு கேட்டார். மற்றொரு பெண்மணிக்கும்  அவருக்கும் ரெய்கி இரகசியக் கலையை கற்றுக் கொடுத்துவிட்டு, இரண்டாம் உலகப்போரில் அவர் மறைந்தார். மூன்றாவதாக இந்தப் பெண்மணி தனக்கு தெரிந்த இக்கலையை உலக முழுவதும் போய்ச் சேர வேண்டுமென்று எண்ணி 600 பேரை நியமித்து அவர்களுக்கெல்லாம் இதைச் சொல்லிக் கொடுத்து பரப்பச் செய்தார். அமெரிக்காவிலும், ஜப்பானிலும் இவர் ஏற்படுத்திய நிறுவனங்கள் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் இவருடைய இரண்டு பெண் குழந்தைகளும் இந்த ரெய்கிக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள். பழங்காலத்தில் சித்தர்களும் இயேசு கிறிஸ்துவும் மக்களுக்கு நன்மை செய்து விட்டு மறைந்து விட்டார்கள். அவர்களுடைய முறையைத் தான் மிகாவ் உசுயி திரும்பவும் அறிமுகப்படுத்தினார். உலகம் முழுவதும் பரவச்செய்த பெருமை டகாடா அவர்களையே சாரும். ஆதலால் உலக அளவில் மூன்று ரெய்கிகுருக்களான

1. டாக்டர். மிகாவ் உசுயி அவர்கள்

2.  டாக்டர். சுஜிரோ ஹயாஷி அவர்கள்

3. வாயே டகாடா அவர்கள்

இந்த வழிமுறைகளால்தான் எற்கனவே இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குப் போய் திரும்பவும் இந்தியாவுக்கு வந்துள்ளது. ஆனால் தற்சமயம்  ரெய்கி ஓர் ஜப்பானியக்கலை என்றே இன்று சொல்கிறார்கள. நம் கலை திரும்ப நமக்கு வந்த பிறகு அதில் சில யுக்திகளை புகுத்தி ரெய்கி என்ற பெயரோடு நியூ லைப் ரெய்கி என்று ஏற்படுத்தி உள்ளார்கள்.

நியூ லைப் ரெய்கி முறையில் உம்மையும், மனதையும் சுத்தப்படுத்தும் ஸோஹம் என்ற மூச்சுப் பயிற்சியை முதலாவதாக வைத்துள்ளது. இரண்டாவதாக ரெய்கி தியானம் இதில் முழு உடம்பையும் Relax செய்து ரெய்கியை Golden Ball ஆக உருவகப்படுத்தி ஒவ்வொரு சக்கரத்தையும் சக்தியூட்டுவது மூன்றாவதாக சக்ரா தியானம் சக்கரங்களை ஒவ்வொருவரும் சமநிலையில் வைத்துக் கொண்டால் நோயின்றி இருக்கலாம்.சக்கரங்களின் அமைப்பும் அதன் விவரங்களும் Chakra Means Lotus சக்கரங்கள் என்பது நமது உடம்பின் சக்தி மையங்கள். உடம்பின் மேலி ருந்து கீழ் வரை 7 சக்கரமும் உள்ளங்கை சக்கரம், பாதசக்கரம், விரல் நுனிகளில் மினி சக்ரா என்று இருக்கிறது. 7 சக்கரமும் 7 கலரில் இருப்பதாக சித்தர்கள் சொல்லி உள்ளார்கள். மேலும சக்கரங்கள் மந்திரத்துக்கு கட்டுப் படும் என்றும் சொல்லியுள்ளனர். சக்கரங்களின் பெயரையும், அதன் அமைப்பு, Function முழுவிவரமும் பார்க்கலாம்.


ஸகஸ்ரா சக்கரம் - ஆயிரம் இதழ்

Third Eye - இரண்டு இதழ் (அல்லது)  96 இதழ்கள்

Heart Chakra - 16 இதழ்

Solar Pleyus - 10 இதழ்

Sacrel Pleyus  - 6 இதழ்

Basic - 4 இதழ்

இந்த அமைப்பில் இருப்பதாக உருவகப்படுத்தி உள்ளார்கள்.


சக்கரங்களின் குணங்களைப் பற்றிப் பார்க்கலாம்.


1. தலைஉச்சி சக்கரம் Crown Chakra - நரம்புமண்டலத்தை ஆட்சி செய்கிறது. spiritually, cosmic, energy connectoin enlightement awenking consiouses, ஆன்மீகத்தில் உயர்நிலையை அடையச் செய்கிறது.

2. நெற்றி சக்கரம் Thiry eye & முதல் 2 சக்கரமும் நரம்பு Control மண்டலத்தை செய்கிறது. self control, will power, concentection, Intelligence, intution, clair voyance ட்யூட்டரி சுரப்பி நன்றாக தூண்டப்படுவதால் மேன்மை நிலை ஏற்படும்.

3. தொண்டை  சக்கரம் Throat chakra - நோய் எதிப்பு சக்தி கொடுக்கிறது. தைராய்டு சுரப்பியோடு தொடர்பு உடையது. Self expression, communication self element.

4. இருதய சக்கரம் Heart chakra - இருதயம், lungs - ன் மேல் பகுதி, தைமஸ்Gland Love & affection compassion எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் air element

5. வயிறு சக்கரம் solar plexus - ஜீரண சக்தியோடு தொடர்பு உடையது. Fire element சிறுகுடல், பெருங்குடல், பான்கிரியாஸ் சக்தியின் மொத்த இருப்பிடம் power house - power wisdom

6. தொப்புளடி சக்கரம் Sacrel plexus & Sex argaus abundance இனவிருத்தியோடு தொடர்பு உடையது.

7. மூலாதார சக்கரம் - எலும்பு மண்ட லத்தை தாங்கி பிடிக்கிறது. Security, stablity, பூமியோடு தொடர்பு உடையது.

ஒவ்வொரு உடம்பைச் சுற்றிலும் கண்ணுக்குத் தெரியாத சூட்சும் சக்தி உண்டு. இதற்கு `ஆரா' (Aara) என்று பெயர். வெளி உடல் ஆரா உடல் ஆரா, ஆரோக்கிய உடல் ஆரா என்று மூன்று பிரிவு உண்டு. தியானங்களில் படிப்படியாக முன்னேறி ஆரா நிலையை 7 கலரில் கொண்டு வரலாம். இதை கிரிலியின் போட்டோ கிராபி மூலமாக துல்லியமாக பார்கலாம்.

ஒவ்வொருவரும் நேர்மறையான எண்ணங்கள், உள்ளும் புறமும் தூய்மை, என்றிருக்கும் போது ஆரா நன்றாக விரிவடைந்து சக்தியுடையதாக இருக்கும். சிலருடைய ஆரா இருக்காது. ஒருவருக்கு ஆரா weak ஆக இருக்கும் போது மற்றவர்களுடைய திருஷ்டிப்பார்வை, பொருமை இவர்களுடைய பார்வை படும்போது கண்டிப்பாக அது பிரச்சனையை ஏற்படுத்தும் ஒவ்வொருவருக்கும ஆரா 2 metre அளவிற்கு இருக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறை சித்தர்கள், மகான்கள், உயர்நிலையை அடையப் பெற்றவர்களுக்கு ஆராவானது ரொம்ப தூரத்திற்கும் சக்தியை அடையபெற்று, இருப்பதால் தான் அவர்களுடைய பார்வை பட்டாலோ அவர்களை ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும்போது நல்ல மாற்றம் மனதிற்கு அமைதி முன்னேற்றம் கொடுக்கிறது.

ஒவ்வொரு வருக்கும் ஆரா சக்ரா எப்படி இருக்கிறது என்பதை பெண்டுலம் மூலமாக பார்த்து நாம் சரி செய்து கொள்ளலாம் எவ்வளவு சதவீதம் postive - negative என்று தெரிந்து மூச்சுப்பயிற்சி, தியானம் கிரிஸ்டல் மூலமாக பலப்படுத்தலாம். ஆராவையும் சக்ராவையும் பலப்படுத்தும் போது நோயும் உட்புகாது ஆரோக்கியமாக இருக்கலாம். இரவு படுக்கும் முன்பு சக்ரா தியானம் செய்தால் எல்லா சக்கரமும் சமநிலைக்கு வந்து உடல் ஆராக்கியம், மன ஆராக்கியம், பெற்று உடல், மனம், ஆன்மா மூன்றும் ஒருங்கிணைந்து எலலா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ ரெய்கி ஓர் உறுதுணையாக இருக்கும் என்பதில் சிறிது ஐயமில்லை.

ரெய்கி குறியீடுகள்.

bksureshv@gmail.com


நாம் இதுவரைக்கும் ரெய்கி என்றால் என்ன? என்பதையும்,ரெய்கியின் வரலாறு பற்றியும், நமது உடம்பில் உள்ள ஆரா மற்றும் சக்கரங்கள் குறித்த விளக்கத்தையும் கண்டோம். தொடர்ந்து வாசிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். அதனையும் கடந்து சந்தேகம் இருந்தால் கடிதம் மூலம் தொடர்பு கொண்டால் விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன். நாம் இப்போது ரெய்கியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதனைப்பற்றியும், அதன் பலன்கள் குறித்தும் காண்போம்.

குரு மூலமாக ஒருவர், தனக்குள் இருக்கும் தேவையற்ற சக்திகள், தேவையற்ற எண்ணங்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்திவிட்டு, `ஈகோ' வையும் துறந்துவிட்டு, அதன் பிறகு தீட்சை எடுத்துக் கொண்டால், அதாவது பிரபஞ்ச சக்தி யைத் தனக்குள் உள்வாங்கிய பிறகு, அதனைக் கைகள் மூலமாக வெளிக்கொணர்ந்து, உள்ளங்கைகளில் அந்தச் சக்தியை உணர்ந்து, அந்த சக்தியோடு சில மந்திரங்களையும் சேர்த்து, தனக்குத் தானே சிகிச்சை (சக்தி) அளித்துக் கொள்ளலாம். உடல் முழுவதும் ஏழு சக்கரங்களுக்கும், கண், காது, தாடை, தோள் பட்டை, கால்கள் என எல்லா பாகங்களுக்கும் மந்திரம் சொல்லி சக்தி கொடுத்து, வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். இருக்க இயலும், இது உறுதி. ரெய்கி குறியீடுகளை ( Reiki symbols )மந்திரங்கள் என்று சொல்லாம். இம்மந்திரச் சொற்களை உச்சரித்துக் கொண்டு, குருவை நினைத்து இரண்டு தினங்கள் தியானம் செய்துவிட்டு ஆகாயத்தில் பார்க்கும் போது கிடைக்கும் சக்தி அளப்பரியது.

பிறருக்கும் மற்றவர்களுக்கும் தொட்டும், தொடாமலும், தள்ளி நின்றும் சக்தியை வழங்கலாம். பிறருடைய நோயையும் குணப்படுத்தலாம். உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும், மனரீதியான பிரச்சனைகளுக்கும் உரிய நிவாரணம் அளிக்கலாம். குடிப் பழக்கத் திற்கு அடிமையானவர்களை ரெய்கி மூலம் நல்வழிப்படுத்தலாம்.

கணவன் மனைவியிடையேயான நேசிப்பை அதிகரிக்கச்செய்யலாம். அதாவது கணவன் அல்லது மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் ரெய்கி பயிற்சியை எடுத்துக்கொண்டால் மனம் பக்குவமடைகிறது. பொறுமையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், மற்றவர்களை மன்னிக்கும் தன்மையும், விரோதிகளுக்குக் கூட நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணங்களும் அதிகரிக்கும். மேலும் உயர்ந்த நற்குணங்கள் நம்மிடையே தங்கிவிடுவதால் ஒருவருக்கொருவர் தூய்மை யான அன்பைப் பரிமாறிக்கொள்ளமுடியும்.

தொலைதுரத்தில் இருந்தே ரெய்கி சிகிச்சையை வழங்க இயலும். அதாவது வெளியூரில் இருப்பவர்களுக்கும், வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் கூட நாம் இருந்த இடத்திலிருந்தே சக்திகளை அனுப்பி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.  உதாரணமாக எங்கோ நடக்கும் நிகழ்வுகளைக் காற்று மண்டலத்தின் உதவியுடன் நாம் இருந்த இடத்திலிருந்தே தொலைக்காட்சி வழியாகப் பார்க்கிறோமல்லவா. அதே போல நாம் அனுப்பும் ரெய்கி சக்தியும் காற்று மண்டலத்தின் வழியாகவும், தேர்ட் டீ ட்யூனிங் (Third eye tuning) வழியாகவும் சம்பந்தப்பட்டவர்களைச் சென்றடையும்.

தேர்வு சமயத்தில் படிக்கும் மாணவர்களுக்குச் சக்தி அனுப்பி நன்றாக எழுதவும், அதிக மதிப் பெண் பெற வைக்கவும் ரெய்கியினை பயன்படுத்தலாம்.

நமக்கும், பிறருக்கும், வாகனங்களுக்கும், குடியிருக்கும் வீட்டுக்கும் எந்தத் தீய சக்தியும் அணுகாதவாறு பாதுகாப்புக் கவசத்தையும் இதன் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.

நாம் குடியிருக்கும் வீட்டைத் தூய்மைப்படுத்தி, சக்தியூட்டி வீட்டிலிருப்பவர்களை ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வைத்திருக்கவும் பயன்படுத்தலாம்.

தேர்வு எழுதும் பேனாவிற்கும் ரெய்கி சக்தியை வழங்க இயலும். மருந்து மாத்திரைகளுக்கும் ரெய்கி சக்தியை வழங்கி, அதன்பின் சாப்பிட்டால் நோய்கள் விரைவில் குணமாகும். தீய பழக்கம் எல் லாவற்றிலுமிருந்தும் ரெய்கி மூலம் நம்மைப் பாதுகாக்கலாம்.

காணாமல் போன பொருட்களையும் கண்டறியலாம்...

ரெய்கியின் சக்தியைப் பயன்படுத்தி, கிடைக்கும் பலன்களை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

டொக்டர் மிகாவ் உசாயி கண்டுபிடித்தவை `ட்ரெடிசனல் ரெய்கி' (Traditional reiki) என்றும், அதன் பிறகு சில மாற்றங்களுடன் வெளிவந்த ரெய்கியை `கருணா ரெய்கி' (Karuna reiki) என்றும், பின்பு `நியூ லைஃப் ரெய்கி' என்றும் மாற்றியமைக்கப்பட்டது. இந்த மாற்றங்கள் எல்லாம் காலப்போக்கில் ஏற்பட்டவை தான்.

ட்ரெடிசனல் ரெய்கியில் மூன்று குறியீடுகளை (symbols) மட்டுமே பயன்படுத்துவார்கள். அதனைப் பற்றித் தற்போது காண்போம்.

1) Cho -ku-ray (சோ-கூ-ரே)

2) Sai-kai-kay (சாய்-காய்-கே

3) Hon-sha-za-sho-nen (ஹான்-ஸ-ஸோ-னென்)


சோ-கூ-ரே : இம்மந்திரம் எல்லாவற்றிற்கும் பொதுவாக உபயோகிக்கும் மந்திரம். ஏனெனில் மிக மிக சக்தி வாய்ந்த மந்திரம் இது. பூமியையும், ஆகாயத்தையும் இணைக்கும் நேர் செங்குத்துக் கோடு. அதாவது பூமியும், ஆகாயமும் இணைந்தது தான் பிரபஞ்ச சக்தி என்றும் சொல்லாம். இதை உடல் முழுவதும், உடலின் எல்லா பாகங்களிலும் போடலாம். அனைத்துப் பொருள்களின் மீது சொல்லிப்பார்த்தும் பயன்படுத்தலாம். எல்லா இடங்களிலும் வரைந்து பார்த்தும் சக்தி அளிக்கலாம். சாப்பிடும் பொருட்களில் இந்த மூன்று மந்திரங்களையும் பயன்படுத்தலாம். நல்ல விடயங்களுக்கும், நல்ல நோக்கத்திற்கும் இதனைப் பயன்படுத்தலாம்.

சாய்-காய்-கே : இரண்டாவது மந்திரமான இதனைப் பொதுவாகவும், முதல் இரண்டு சக்கரத்திற்கும் போட்டுப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சுயக்கட்டுபாடு, மன உறுதி, தன்னம்பிக்கை ஆகிய நல்ல பழக்கங்களும், நரம்பு தளர்ச்சி மற்றும் தீய பழக்கங்களிலிருந்து விடு பட உதவி புரிகிறது. அதிகமாக குறும்பு செய்யும் குழந்தைகளை கட்டுப்படுத்தவும் இதனைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு மிகவும் தேவையான நினைவுத் திறனையும், அறிவு கூர்மையையும் அதிகரிக்கச் செய்யலாம். உயர் சக்திகளான இன்ட்யூசன் (Intution), டெலிபதி ஆகியவற்றையும் மேம்படுத்தலாம்.

ஹான்-ஸ-ஸோ-னென் :  இது மூன்றாவது மந்திரம். இது ஒரு நீளமான மந்திரம். தொலைதூர  சிகிச்சையில் பயன்படும் ஒரு மந்திரமும் கூட. நாம் அனுப்பும் சக்தி, மிக உயரமான இடங்களை கடந்து, அதிக தொலைவிற்குச் செல்லும் வல்லமை வாய்ந்தது. தலை முதல் கால் வரை போடலாம். கர்ம வினையை நீக்கவும் பயன்படுத்தலாம். நாள்பட்ட வியாதிகள், முதுகு வலி, தண்டுவட பிரச்சனை, கால்வலி, உடம்பின் பின்பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் சக்தி கொடுத்து பயனடையச் செய்யலாம். இதில் பாரம்பரியமான முறை மற்றும் பாரம்பரியமற்ற முறை என இரண்டு வகைகள் இருக்கிறது. இம்மந்திரம் தொலைதூர சிகிச்சைக்கு அதிக பலனை கொடுக்கும். உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருப்பவர்களுக்கு மூன்றாவது கண் என்ற தொடர்பினை ஏற்படுத்தி, சக்தி அனுப்பி, அவர்களுடைய பிரச் சனைக்குத் தீர்வு காணலாம். நாம் யாருக்குச் செய்கிறோமோ அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி, கை கால்களை அசையா வண்ணம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கச் சொல்லியோ அல்லது படுத்திருக்கச் சொல்லியோ, நாம் இருக்கும் இடத்தில், நமக்கு எதிரே அவர்களை இருக்குமாறு கற்பனை செய்து, மூன்றாவது கண் தொடர்பு மூலம் பொதுவாகவோ குறிப்பிட்டோ சுத்தம் செய்யும் மந்திரங்களைச் சொல்லி, தூய்மைப்படுத்தி விட்டு, பிறகு சக்தியூட்டும் மந் திரங்களைச் சொல்லி, சக்தியை வேண்டும் அவர்களுக்கு அனுப் பினால், அவர்களுக்கு கோல்டன் சர்க்கிள் ஆரோக்கியமாக, ஆனந்தமாக ஐஸ்வர்யமாகப் பார்த்து, அந்த காட்சியை உத்ரேகா போட்டு, மூடிவிட்டு, ரெய்கிக்கு நன்றி கூறி, மூன்றாவது கண் தொடர் பினைத் துண்டித்து விடலாம். அடிப்படையில் இந்த முறையை வைத்துச் சரியாக ஒத்துழைக்காதவர்களுக்கும் பயன்படுத்தலாம். நேர்காணலுக்குச் செல்பவர்களுக்கும், செய்பவர்களுக்கும் இந்த முறையில் சக்தி வழங்கலாம். ரெய்கியை நல்லவிடயங்களுக்குப் பயன்படுத்தினால் நூறு சதவீதம் பலன் கிடைப்பது உறுதி.

4) ஹோசன்னா (Hosanna):   இது சுத்தப்படுத்தும் மந்திரம். இதன் மூலம் ஃடிதிடிணஞ், Living, Non-living ஆகியவற்றை சுத்தப்படுத்தலாம். நமது உடலை தூய்மைப்படுத்தவும், ஓரிடத்தை தூய்மைப்படுத்தவும் ஹோசன்னா மந்திரத்தைச் சொல்லாம். ரெய்கியானது உடலுக்கும், மனதிற்கும், வாழ்க்கைக்கிற்கும் எல்லாவிதத்திலும் எண்ணற்ற பலன்களைக் கொடுத்து பயன்படுவதால் ரெய்கி, வாழ்க்கையை வாழவைக்கும் வாழ்க்கைக் கலை என்று சொன்னால் மிகையாகாது என்று சொல்லி இந்த இதழை நிறைவு செய்கிறேன்.

வெள்ளைப் படிகம் (White Crystal):

 bksureshv@gmail.com



1. வெள்ளைப் படிகம் (White Crystal):

இந்த இரத்தினம் வெள்ளை நிறத்துடன் கூடியது. இது 7 வண்ணங்களையும் வெளிவிடும் தன்மை கொண்டது. கிரிஸ்டல்கள் பூமிக்கடியில் பல இலட்சக்கணக்கான வருடங்களாகப் படிப்படியாக உருவாகின்றன. தண்ணீர் கெட்டித்தன்மையாக்கப்பட்டு அத்தோடு பூமிக்கடியில் உள்ள (Minerals) தாது உப்புக் களும் சேர்ந்து படிகமாக மாறுகிறது. இவைகளுக்கு (Heart Beat) உயிர்த் துடிப்பும் உண்டு, ஒரு நொடிக்கு 35658 அதிர்வுகளை உடையது. நாம் சொல்பவைகளை உள் வாங்கிக் கொள்ளும் தன் மையும் இவைகளில் காணப்படுகிறது. மேலும் இவை உள் வாங்கியவைகளை வெளிவிடும் தன்மையும் கொண்டதாக விளங்குகின்றது. இதை பல வடிவங்களில் அணியலாம். மாலை, தங்கக்காப்பு, மோதிரக்கல், பிரமிடு, பென்சில், படிகப்பந்து  இன்னும் பல வடிவங்களில் இந்த படிக இரத்தினம் உள்ளது.

சூட்டு உடம்பு உடையவர்கள் வெள்ளைப் படிகத்தை இரவு தண்ணீரில் போட்டு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர சூடு குறையும். உடம்பு வலிக்கு மேல் பூச்சாகவும் ஜபமாலையாகவும் இதைப் பயன்படுத்தலாம். வைரத்திற்குப் பதிலாகவும் இவற்றை உபயோகிக்கலாம். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் போடலாம். பென்சில் படிகத்தை பாக்கெட்டில் வைத்து வர, நல்ல சக்திகள் உருவாகி, நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தும்.

2. ரோஜா நிறப் படிகம்

இது ரோஜா நிறத்தில் இருக்கும், உடம்புக்கு சூட்டுத் தன்மையைக் கொடுக்கும். மூச்சிரைப்பு, ஆஸ்த்துமா, சுவாசப்பை அடைப்பு பிரச்சனை யைக் குணப்படுத்துவதில் மிகவும் நன்மை செய்யும். தீய சக்திகளை நீக்கவும், திருஷ்டி போக்கவும் இந்த இரத்தினம் ஏற்றது. கட்டிடங்களை ஆரம்பிக்கும்போது பூமிக்கடியில் போட்டுக் கட்டும்போது எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல் வீடு நல்ல முறையில் இருக்கும். இங்கிலாந்து அரண்மனையை எதிரிகள் தாக்காது இருக்க, இந்த இரத்தினத்தை அதனடியில் போட்டு இருப்பதாக வரலாறு குறிப்பிடுகிறது. இதனை குளிக்கும் தண்ணீரில் போட்டும் குளிக்கலாம். மிக முக்கியமாக உறவுகள் மேம்படவும், கணவன்-மனைவி அன்பு அதிகரிக்கவும் இந்தத இரத்தினத்தைப் பயன்படுத்துவர்.

3. செவ்வந்திக்கல்

இது இலேசான ஊதா நிறத்திலும், அடர்த்தியான ஊதா நிறத்திலும் இருக்கும். இந்த இரத்தினத்தில் அணிவது ஆன்மீகத்தில் உயர் நிலையை அடைய உதவும். இக்கல்லைப் பிரமிடு வடிவ தியான மண்டபக் கட்டிட அடியில் போடலாம்.

நரம்புத் தளர்ச்சி உடையவர்கள் மாலையாகப் போட்டுக் கொள்ளலாம். தன்னடக்கம், மனோபலம், தன்னம்பிக்கை போன்றவற்றிற்கு பிரமிடை நெற்றியில் வைத்துக் குணப்படுத்தலாம். மிக முக்கியமாக, படிக்கும் குழந்தைகள் ஞாபக சக்தி, அறிவுத் திறன் அதிகரிக்க இதைப் பயன்படுத்தலாம். இதனை மருத்துவத்திற்கு படிக்கும் மாணவர்கள் போட்டுக் கொள்ளும்போது நல்ல மதிப்பெண் பெற முடியும், தேர்வுச்ச் சமயத்தில் பதற்றம் இல்லாமலும் இருக்கும். இதனை ஆண்களும், பெண்களும் அணிந்தால் இலச்சுமி கடாட்சம் ஏற்படும். மன உளைச்சல், மனப்பதட்டம் உள்ளவர்கள் பயன்படுத்தினால் அழுத்தம் குறையும், நல்ல மன அமைதி கிடைக்கும். மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகளுக்கும் இதனைப் பயன்படுத்தலாம்.

4. பச்சைக்கல் (ஜேடு):

ஜேடு என்றால் பல வர்ணங்களில் உள்ள விலையுயர்ந்த கல்லாகும். இவை பெரும்பாலும் பச்சை வண்ணத்திலேயே இருக்கும். இதனை மரகதத்திற்குப் பதிலாக உபயோகிக்கலாம். இருதயத்திற்கு உரியது.

1. இருதயத்தில் இரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,  சர்க்கரை நோய் உள்ளவர்களும் அணியலாம்.

2. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மாலை யாக அணிந்து கொள்வதால் இரத்த அழுத்தம் குறைகிறது.

சுவாசப்பையில் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது. மன அமைதி, நிம்மதி தருகிறது. கிட்னி நோயாளிகள் ஜேடு மாலை அணிந்து, சிறுநீரகப் பகுதியில் இயந்திரம் அல்லது ஜேடு வைத்து குணமடைந்துள்ளனர். உயர் இரத்த அழுத்தம், இதயம், மற்றும் சிறுநீரகம் சம்பந்த நோய்களை அற்புதமாகக் குணப்படுத்துகிறது. மேலும் மிக முக்கியமாக அதிர்ஷ்டத்தையும், வசதிகளையும் அதிகரிக்கச் செய்கிறது. பணப்பெட்டியில் போட்டால் பணம் அதிகரிக்கும், யோகம் பெருகும். இந்த இரத்தினம்  இரத்தம் சம்பந்தப்பட்ட நோயை நீக்குவதில் நல்ல பலன் தரும். உடல் உறுப்புக்கள் எல்லாவற்றையும் சக்தி பெறச் செய்யும். மேலும் வெப்பச் சக்தி கொடுக்கும். இது செவ்வாய் கிரகத்தின் குணத்தை உடையதாகும்.

மிதுனம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த இரத்தினத்தை  அணிந்தால், அவர்களது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக்கும். நாட்பட்ட நோய்களை நீக்கி நல்ல பலனைக் கொடுக்கும்.

ரெய்கி இரகசியங்கள்

 bksureshv@gmail.com


ரெய்கி இரகசியங்கள்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பெரியோர் வாக்கு. உலகில் பிறந்த மக்கள் அனைவரும் விரும்புவது நோயில்லாமல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றுதான். ஏனெனில் மற்ற எவ்வளவோ செல்வங்கள் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மற்ற எல்லா சுகங்களையும் அனுபவிக்க முடியும். உடல் சுகமில்லாவிட்டால் வாழ்க்கையில் விரக்திதான் வரும். வாழ்வானது சுகம் பெறுவதற்கே. வேதனையை அனுபவிப்பதற்கல்ல. இந்த நவீன இயந்தில உலகில் மக்கள் இனைவரும் நலமில்லாமலும் திருப்தி இல்லாமலும் பிரச்சனைகளோடும்தான் வாழ்நாளைக் கடத்திக்கொண்டிருக்கின்றனர். ஒரு காலகட்டத்தில் நாம் யோசித்துப் பார்க்கும்போது, `அட! என்னடா இது வாழ்க்கை' என்றும் நாம் ஏன் பூவுலகில் பிறந்தோம் என்றும் எண்ணத் தோன்றும். இப்படியில்லாமல் ஒவ்வொரு மணிநேரமும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை ரசித்தும் அனுபவித்தும் சந்தோஷமாகக் கூடி வாழ்ந்தும் முடிப்பதும்தான் ஒரு முழுமையான, திருப்தியான, ஆத்மார்த்தமான இன்பத்தை அடைய முடியும். இந்த ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்க்கையை அற்புத அதிசய ரெய்கியின் மூலம் பெற முடியும் என்பது உறுதி.

ரெய்கி என்பதன் விளக்கம்: ரெய் என்றால் தூய்மையான, புனிதமான என்றும் கீ என்றால் Cosmic enrgy (Universal Power) என்றும் சொல்லலாம். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில். பிண்டத்தில் உள்ளது அண்டத்தில். அண்டத்தில் அளவிலா சக்திகள் இயங்குகின்றன. அதே சக்திகள் உடம்பிலும் இயங்குகின்றன. உலகம் இயங்கக் காரணமாக இருப்பதே இந்த சக்திதான். உலகில் உள்ள எல்லா உயிரினங்கள், தாவரங்கள் மட்டுமன்றி, நதிகள் ஓடுவது, நெருப்பு எரிவது, காற்று வீசுவது போன்ற எல்லா இயக்கங்களுக்கும் காரணம் சூட்சும சக்திதான். பஞ்ச பூதங்களும் அதன் விதிப்படி பிரபஞ்சத்தில் இயங்குவது போல, நமது உடம்பிலும் பஞ்சபூத சக்திகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதனை நாம் உணருவதில்லை. ரெய்கியின் மூலமாக அந்த சக்தியினை நாம் உணரமுடியும். எப்படியெனில் பிரபஞ்ச சக்தியை சஹஸ்ரஹார சக்கரத்தின் மூலமாக, மற்ற எல்லா சக்கரங்களுக்கும் சக்தியைச் செலுத்தி, அதன்பின் தியானங்கள், பயிற்சி வழிமுறைகள் மூலமாக அந்த சக்தியை கைக்கு (உள்ளங்கை) கொண்டுவந்து தனக்குத் தானே சக்தியக்ஷட்டிக்கொள்ளவும் அடுத்தவர்களுக்கும் சக்தியூட்டவும் பயன்படுத்தலாம். இதை சூட்சும சக்தி என்றும் சொல்லலாம். இதைக் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் நாம் நூறு சதவிகிதம் உறுதியாக, கண்டிப்பாக உணர முடியும். இதை ரெய்கி சூட்சுமம் என்றும் சொல்லலாம்.

ரெய்கி சிறப்புகளும் பயன்களும்: ஒரு குரு மூலமாக தீட்சை எடுக்கும்போது சக்கரங்கள் திறக்கப்பட்டு சூட்சும சக்தி மூலாதாரத்தை அடைந்து பயிற்சியின் மூலமாக கைகளுக்குக் கொண்டுவரும்போது அவர்கள் ரெய்கி சேனல் ஆகிவிடுகிறார்கள். சிலருக்கு இது உண்மையில் சாத்தியப்படுமா என்ற சந்தேகம் எழலாம். எவ்வளவோ அதிசயங்கள் ஆங்காங்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியாது. நிரூபிக்க முடியாத எல்லாவற்றையும் உண்மையில்லை என்றும் சொல்லிவிட முடியாது. நடக்கும் சில விஷயங்களின் கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது. தியானம் செய்வதன் மூலமாகக்கூட சில விஷயத்தை நடத்திக்காட்ட முடியும். ரெய்கி உடம்புக்கும் மனதுக்கும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மற்ற எவ்வளவோ பிரச்சனைகளுக்கும் விஷயங்களுக்கும் பயன்படுகிறது. மருந்து மாத்திரையின்றி கைகள் மூலமாகவே அதிசயங்களைக் காண்பதே சிறப்பம்சமாகும்.

மேலும் மன அழுத்தம், டிப்ரஷன், தாழ்வு மனப்பான்மை நீங்கும். படிக்கும் மாணவ மாணவியருக்கு ஞாபகசக்தி, அறிவுத்திறன் அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அடம்பிடித்தல், தேவையற்ற பழக்கவழக்கங்கள், அதிகமாக மது அருந்துதல், மனதில் எதிர்மறையான எண்ணம் தோன்றுதல் போன்றவற்றுக்குத் தீர்வாகும். ஜீரணசக்தியை அதிகரிக்கச் செய்தல், வயிறு சம்பந்தமான பிரச்சனைக்கும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். நாம் இருந்த இடத்திலிருந்தே தொலைதூரத்தில் உள்ளவர்களுக்கும் சக்தி அனுப்பவும் நம் உள்ளுணர்வை மேம்படுத்தவும் நமக்குப் பாதுகாப்புக் கவசம் போட்டுக் கொள்ளவும் உதவும். கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கப் பயன்படும். நாம் வாழும் வீட்டைத் தூய்மைப் படுத்தி, சக்தியூட்டி, அமைதியாக, ஆனந்தமாக வாழ, வாழ்க்கையின் எல்லா நிலைகளுக்கும் பயன்படுவதால், ரெய்கி வாழ்க்கையை வாழவைக்கும் வாழ்க்கைக்கலை என்றால் மிகையாகாது.

ரெய்கியோடு வாஸ்துவும் பெங்சுயியும்:.இயற்கையின் படைப்பில் 84 இலட்சம் ஜீவராசிகள் இருக்கின்றன. அதில் அற்புதமான படைப்பு மனித இனமே. இந்த மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் மூன்றும் முக்கியமானதாகும். உறைவிடமாகிய வீட்டை வாஸ்து சாஸ்திரத்திற்குப் புறம்பாக அமைத்துக்கொள்பவர்கள் தான் பலத்த கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள். வீட்டின் அமைப்புகளை பஞ்சபூத சக்திகளின் அடிப்படையில் அமைத்தால் சுபிட்சம் இருக்கும். மேலும் காற்றோட்டமும் உள்ளிருந்து வெளியே போவதும் வெளியில் இருந்து உள்ளே வருவதும் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும். திசைகளையும் அடிப்படையாகக் கொண்டது வாஸ்து.

கிழக்கு: இந்திரனுக்குரியது. இதனை பித்ரு ஸ்தானம் என்றும் சொல்வர். இத்திசை இந்திரனுக்குரியதாக இருப்பதால் செல்வ வளம், புகழ், கல்வி, அதிர்ஷ்டம், வெற்றி முதலியவற்றைத் தரும். குறைபாடுகள் ஏற்பட்டால் ஆண்களையும்  ஆண் வாரிசுகளையும் பாதிக்கும்.

தென்கிழக்கு: அக்னிக்குரியது. சமையலறை, சாப்பிடும் அறை அமைய உசிதமான இடம். வாஸ்துப்படி அமைந்தால் உடல்நலம், மனநலம் என்பவற்றோடு பெண்களுக்கு மேன்மையும் தரும். வடமேற்கிலும் சமையறை வைக்கலாம். தவறாக இருநு்தால் பெண்மணியைப் பாதிக்கும். ஆஸ்பத்திரி செலவும் ஏற்படும்.

தெற்கு: இந்தப் பகுதியை எமதர்மர் ஆட்சி செய்கிறார். குறைபாடுகள் இருந்தால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். பெண்கள் உடல்நலமும் பாதிக்கப்படும். நோய்கள் ஏற்படும்.

தென்மேற்கு: இந்தப் பகுதி நைருதிக்குரியது. பலன்களைத் தாமதப்படுத்தாமல் விரைவாக வழங்குவதில் நைருதி சமர்த்தன். ஈசானியப் பகுதிக்கு எந்தளவு முக்கியத்துவம் தரப்படுகிறதோ, அந்தளவுக்கு நைருதிக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.

மேற்கு: வருணன். மழைக்கடவுள். செழிப்பையும் வளர்ச்சியையும் தருபவன். இந்தப் பகுதி ஆண்களின் மேல் ஆதிக்கம் செலுத்தும் பகுதி. பொருளாதார வளர்ச்சி, குடும்ப கௌரவம், அந்தஸ்து போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் திசை. இது ஆண் வாரிசுகளுக்கு மேம்பட்ட பலனைத் தரும்.

வடமேற்கு: வாயுபகவானுக்குரியது. துரிதமான வேகம் கொண்டவன். பெண்களின் வாழ்க்கை, கணவன்-மனைவி உறவில் பலன்தரும். குறைபாடு இருந்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, வழக்குகள், பாகப்பிரிவினை மற்றும் பெண்களின் ஆதிக்கத்தால் ஆண்கள் பலம் குறைவது போன்றவை இருக்கும்.

வடக்கு: மாத்ரு ஸ்தானம். குபேரனுக்குரியது. செல்வத்தின் அதிபதி. சமூகத்தில் அந்தஸ்து, கௌரவம், செல்வச் செழிப்பு உண்டாகும். குறைபாடு இருந்தால் எதிர்மறையாக இருக்கும்.

வடகிழக்கு: ஈசானிய மூலை. இதை சனிமூலை என்றும் சொல்லலாம். ஈசனுக்குரியது. சூரிய சக்தியும் காந்த சக்தியும் இணைந்த பகுதி. எடை குறைவான பொருட்களும் புனிதமான பொருட்களும் வைத்து, எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தற்சமயம் சைனீஸ் வாஸ்துப்படி பொருட்களை அதனதன் இடத்தில் வைத்து வளத்தோடும் நலத்தோடும் வாழலாம்.

ரெய்கி சக்தியின் அற்புதமும் கிறிஸ்டல் சக்திகளின் அற்புதமும்

bksureshv@gmail.com


ரெய்கி சக்தியின் அற்புதமும்
கிறிஸ்டல் சக்திகளின் அற்புதமும்

உலகில் பிறந்த மக்கள் அனைவரும் விரும்புவது வெற்றியையே. மேலும், தாங்கள் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிபெற வேண்டும் என்று எண்ணுவதும் மனித இயல்பே. ஆனால் அனைத்து மக்களும் வெற்றி பெறுகிறார்களா என்று பார்க்கும்போது இல்லை என்றே பதில் வருகிறது. அதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள்.

1. காந்த சக்தி (மனவுறுதி படைத்தவர்கள்) 2. காந்த சக்தி (மனவுறுதி இல்லாத மனிதர்கள்)

இந்த இரண்டு வகையான மனிதர்களில் காந்த சக்தி படைத்தவர்கள், அவர்கள் எடுக்கும் காரியங்களில் நூறு சதவீதம் உறுதியான வெற்றியை அடைவார்கள். காந்த சக்தி இல்லாதவர்கள் இருந்தாலும் இயற்கையுடன் இணைந்து அதாவது, இயற்கைச் சக்திகளான பஞ்சபூத சக்திகளோடு இணைந்து பூமிக்கடியில் கிடைக்கும் கிறிஸ்டல்களின் சக்திகளை உபயோகித்து மிகப்பெரிய வெற்றியை அடையலாம்.

மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் கிறிஸ்டல்கள் மூலமாக கண்டிப்பாகத் தீர்வு உண்டு. கிறிஸ்டலைத் தேர்ந்தெடுத்து பிரச்சனைகளை நீக்கிக்கொள்ளலாம். கிறிஸ்டல்களில் மாபெரும் சக்தி இருக்கிறது. அதற்கு இருதயத் துடிப்பு உள்ளது. அதில் மின் காந்த அதிகப்படுத்தி வெளிவிடும் சக்தி உடையது. மக்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பிரச்சனைகளை, நோய்களை, கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். மனநிலையையும் நோய்களையும் குணப்படுத்த, இந்தக் கிறிஸ்டல்கள் பெரிதும் உதவுகின்றன.

உலகில் உள்ள ஒவ்வொரு வஸ்துவும் அசைந்துகொண்டே இருக்கிறது. மேலும் அதில் அணுத் தன்மை இருக்கிறது. கிறிஸ்டல் கற்களிலும் மின் காந்த சக்தியானது சுற்றிலும் பரவிக்கொண்டே இருக்கின்றன. முப்பட்டை கண்ணாடி வழியாகப் பார்த்தால், நம்முடைய உடலைச் சுற்றிலும் வண்ண ஒளியைப் பார்க்கலாம். அவரவர் குறைபாட்டுக்குத் தேவையான கிறிஸ்டல்களைத் தேர்ந்தெடுத்து அதைச் சரீரத்தில் பரவ விட்டால், நமது சரீரத்தில் ஏற்பட்டுள்ள சக்தி இழப்புகள் நீங்கி, அதிக சக்தி பெற்று, உற்சாகமாகச் செயற்படும்போது நோய்கள் நீங்கிவிடும். எண்ணங்களும் சீர்பெற்று நம் இலட்சியத்தை அடையலாம்.

இனி கிறிஸ்டல்களின் பலன்கள் பற்றிப் பார்க்கலாம்.

Aqua Marine (மெல்லிய நீல நிறக் கல்)

தொண்டைச் சக்கரத்துக்குப் பயன்படுத்தலாம். இதன் முக்கிய அம்சம், உடலில் ஜீவ சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு விசுத்தி சக்கரத்தில் வைக்கும்போது, அதன் ஒலிக்கதிர்கள், அந்தச் சக்கரம் மூலமாக உட்பகுதிகளுக்குப் பரவி, மிக மோசமான, பலவீனமானவர்களுக்கு நல்வாழ்க்கை அமைய உதவி புரிகின்றது. இக்கல்லானது, உள்ளுணர்வால் வேலைசெய்து, நமக்குப் புரியாத வாழ்க்கை ரகசியங்களைப் புரியவைக்கிறது. கண்பார்வையை அதிகரிக்கச் செய்கிறது. கண் எரிச்சலைப் போக்குகிறது. கண் வீக்கத்திற்கு மேல் பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. மனிதன் இறக்கும் சமயத்தில் உள்ளவர்களுக்கு தொண்டைப் பகுதியில் இக்கல்லை வைத்தால், சிரமங்கள் இல்லாமல் ஆத்மா பிரியும். `உயிர்களை வாழவைக்கும் ஜீவன்' என்று ரோமானியர்கள் இக்கல்லைப் போற்றியுள்ளனர். மீன ராசிக்காரர்கள் இதை அணிந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.

Lapiz Lzauli

முதல் இரண்டு சக்கரங்களுக்கும் பயன்படுத்தலாம். கோபம், உணர்ச்சிவசப்படுதல் என்பவற்றைத் தவிர்த்து, மனதில் அமைதி, நம்பிக்கையைத் தருகிறது. நல்ல குணங்களை வளர்த்து ஆன்மீக சக்திகளை அதிகரிக்கிறது. உயர்நிலை தியானத்தை அடையலாம். வலிப்பு, மூளைக்கோளாறு, வாந்தி, நரம்புத் தளர்ச்சி முதலியவற்றுக்கு உதவும். ரிஷப, விருச்சிக ராசிக்காரர்கள் அணியலாம்.

Amber

மூலாதாரச் சக்கரத்தை உறுதிப்படுத்தும். ஆஸ்த்மா, இருமல், தொண்டைக் கோளாறுகள் மற்றும் பல்வலி என்பவற்றை குணப்படுத்தும். சினிமாக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், அமிதிஸ்ட் மற்றும் ஆம்பர் அணிந்தால், நல்ல பேரும் புகழும் செல்வாக்கான சூழ்நிலையையும் அடையலாம்.

பெரிடாட் Garnet

ஆண்களும் பெண்களும் பொதுவாக மோதிரத்தில் அணியலாம். ஐஸ்வர்யம் பெருகும். லட்சுமி கடாட்சம் ஏற்படும். பணவிருத்தி உண்டாகும்.

Jade Blood Stone

ஜேட் கல்லை, வியாபாரிகள் தம் பணப்பெட்டியில் போடலாம். பிரமிடுகளாக வீட்டில் வைக்கலாம். ஜேட் கல்லால் ஆக்கப்பட்ட மரம் வைக்கலாம்.

ரோஸ் குவார்ட்ஸ்

அன்பு அதிகரிக்கக்கூடியது. வீட்டினுள் அல்லது இதை எங்கு வைத்தாலும் அங்கு தீய சக்திகள் விரட்டப்பட்டு நல்ல சக்திகள் மேம்படும். வீடு கட்டும்போது, பூமிக்கடியில் போட்டுக் கட்டலாம். கணவன்-மனைவி பிரச்சனைக்குப் பயன்படுத்தலாம். தென்மேற்கு மூலையில் பிரமிட் வைக்கலாம். இளைப்பு, ஆஸ்த்மா போன்ற நோய்களைத் தீர்க்கவும் இது உதவும்.

அமிதிஸ்ட்

ஞாபக சக்தியை அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சி, கோபம், தலைவலி, திக்குதல் இவற்றுக்கு நல்ல பெறுபேற்றைக் கொடுக்கும். தேர்வு எழுதும் மாணவர்கள் அமிதிஸ்ட் டொலர் அணிந்துகொண்டால், படபடப்புக் குறைந்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள். அறிவுத் திறனை வளர்க்கும். பயத்தைப் போக்கும். தீயசக்தியை விரட்டும் சக்தி கொண்டது.

அவரவர் பிரச்சனைக்குத் தகுந்த கிறிஸ்டல்களைத் தேர்வுசெய்து உபயோகப்படுத்தி, வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழலாம்.

ரெய்கி Crystal Theraphy

 bksureshv@gmail.com

ரெய்கி ஓர் அற்புத அதிசயம்

சுகத்திற்கே வாழ்வு உலகில் எத்தனையோ வகை செல்வங்கள் இருந்தாலும் முதன்மையானது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஏனென்றால் சுவரிலிருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் பெரிது என்பது பெரியோர் சொல். ஈசனும் சுகத்தின்றே படைத்தானே நம்மை சுகம் என்பது நமது பிறப்புரிமை. அதை யாராலும் தடுக்க முடியாது. நம் ஒவ்வொருவருக்குள் அளவிட முடியாத ஐஸ்வர்யமும், ஆற்றல் மிக்க சக்தியும், ஐஸ்வர்யமும் இருப்பதை உள்மனக் கண்ணை திறந்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அவரவர்களுக்கு தேவையானதை அடையலாம். காந்தசக்தியூட்டப்பட்ட துண்டானது தனது எடையைவிட 12 மடங்கு எடையை தூக்கும் சக்தி பெற்றது. ஆனால் சாதாரண இரும்பால் சிறு துரும்பை கூட அசைக்க முடியாது. அதுபோல மனிதர்களில் இருவகை உள்ளனர்.


1. தனக்குள் இருக்கும் சக்தி, மனஉறுதி நம்பிக்கை படைத்தவர்கள்.

2. மற்றவர்கள் காந்தசக்தி இல்லாதவர்கள் வகையைச் சார்ந்தவர்கள்.


முதல் தன்மை உடையவர்கள் வாழ்க்கையில் நினைத்ததை ஜெயிக்கும் தன்மை படைத்தவர்கள் மற்றவர் எதிலும் தோல்வியை சந்திப்பவர்கள். இந்த மாதிரி எதிர்மறை சக்தி தன்மை படைத்தவர்களும் மற்ற எல்லோருமே ரெய்கி மூலமாக உள்மனதின் ஆற்றல்களை பயன்படுத்தி அத்துடன் பூமிக்கடியில் இயற்கையாக கிடைக்கும் கிரிஸ்டல்களின் துணைகொண்டும் வாழ்க்கைக்கு தேவையான அமைதி, ஆரோக்யம், ஐஸ்வர்யம், எல்லா சக்திகளையும் அடையலாம். இத்தகைய அபரிதமான சக்திகளை வெளியில் தேடாமல் தமக்குள்ளே இருப்பதை அறிந்து சில பயிற்சிகளை கற்றுக்கொண்டு அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.


ஒவ்வொருவரும் ரெய்கி கற்றுக் கொண்டால் மனதில் உள்ள அழுக்குகள் நீங்கி உடம்பின் ஏழு சக்கரங்களும் திறக்கப்பட்டு, நமக்கு நாமே சக்தி கொடுத்து, மற்றவர்களுக்கு சக்தி அளிக்கலாம். நமக்கு பாதுகாப்பு கவசம்போட்டு தீய சக்திகளிடமிருந்து அனுகாதவாறு இருக்கலாம். நாம் இருக்கும் இடத்திலிருந்தே தொலைதூர சிகிச்சை செய்யலாம். ஞாபக சக்தி அதிகரிக்கவும், கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கவும், பிரிந்தவர் ஒன்று சேரவும், மற்றும் பல விஷயங்களுக்கும் ரெய்கி பயன்படுத்தலாம். நமக்கு தேவையானபோது சக்தியை உபயோகிக்கலாம். வேண்டாதபோதும் நமக்குள்ளே சக்தி இருக்கும்.


உலகில் எதை எதையோ அதிசயங்கள் என்ற சொல்லி உள்ளார்கள். ஆனால் அந்த அதிசயங்களை விட மனிதனுக்குள் இருக்கும் இந்த சக்தி தான் ஓர் அதிசய அற்புதமாகும். இதனால் தான் ரெய்கி ஓர் அற்புத அதிசயம் என்று பெயர் வந்தது. ரெய்கியில் பல குறியீடுகள் உள்ளது. அக்குறியீடு பல பிரச்சனைகளுகு பெரிதும் பயன்படும். ஸோவரம் மூச்சுப்பயிற்சி உடம்பையும் மனதையும் சுத்திகரிக்கம். ரெய்கி தியானம் உடம்பின் உள் உறுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சக்தி அதிகரிக்க செய்யும். சக்ரா தியானம் ஏழு சக்கரங்களையும் சமநிலையில் வைத்து, உடம்பின் ஆராவையும் அதிகரிக்க செய்யும். இன்னும் இதுபோன்ற பல பயிற்சிகள் உள்ளன.

ரெய்கியோடு நோய் தீர்க்கும் கிரிஸ்டல்கள்

கார்னெட்: கார்னெட் கற்கள் கருப்பு, பிங்க், சிவப்பு, மஞ்சள் கலந்த பிரவுன் ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கின்றன. இக்கற்கள் மனக்குழப்பத்தை சரி செய்கிறது. எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் போக்குகிறது. இக்கல்லை வைத்து தியானம் செய்யலாம். சக்கரங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு வைக்கலாம். நரம்பு தளர்ச்சி, நரம்பு வலிகள், தங்கத்தில் கட்டி அணியலாம். 5 கிராம், 10 கிராம் எடையில் பணப்பெட்டியில் வைத்து இருந்தால் தன ஆகர்ஷண சக்தியைக் கொடுக்கிறது. பெண்கள் அனைவரும் அணியலாம். லஷ்மி கடாஷம், ஐஸ்வர்யம் பெருகும். ரூபிக்கு பதிலாகவும் அணியலாம்.

ஜேடு: இது பச்சை நிறமாக இருக்கும். மரகதப்பச்சைக்கு பதிலாக உபயோகிக்கலாம். உயர் இரத்த அழுத்த நோயை குணப்படுத்த மிகவும் உதவி செய்யும். இருதய சக்கரத்தை பலப்படுத்தும். டயபடீஸ் நோய்க்கும், இரத்த ஓட்டம் சம்பந்தமான பிரச்சனைக்கும் மாலையாக அணியலாம். இதில் Iron Jade உள்ளது. வெயில் காலத்தில் sunstroke ஐ தடுக்கவும், பித்தப்பை கற்களை நீக்கவும், தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவும் பயன்படுகிறது. மேலும் நல்ல வசதிகளையும், அதிர்ஷ்டத்தையும் தருகிறது.

லாபிஸ் லசுலி: யோகா, ரெய்கி, தியானம் செய்பவர்களுக்கு இக்கல் மனதில் அமைதி நம்பிக்கை தருகிறது. உணர்ச்சி வசப்படுதலில் இருந்து விடுவிக்கவும், கோபத்தை தவிர்க்கவும் வழி செய்கிறது. ஆன்மீக சக்தி அதிகரிக்கிறது. நரம்புதளர்ச்சி, மூளைக்கோளாறு, ஞாபகச்சக்தி பயன்படுத்தலாம். தோல் நோய்க்கும் பயன்படுத்தலாம். உயர்நிலை தியானம் அடையலாம். முதல் 2 சக்கரத்துக்கும் உபயோகப்படுத்தும்போது மேல்நிலையை அடையலாம்.

அமிதிஸ்டு: இதை செவ்வந்திக்கல், லட்சுமிக்கல் என்றும்சொல்லலாம். Light and Dark கலரில் இருக்கும். இது குரல் வளத்தை அதிகப்படுத்துகிறது. நெற்றியில் வைக்கும் போது தலைவலி, தூக்கமின்மை, மனஅழுத்தம் குறைய உதவுகிறது. படிக்கும் மாணவர்களுக்கு ஞாபகசக்தி கிடைக்கும். கிரிஸ்டல்மரம், திராட்சை கொத்து, படிக்கும் அறையில் வைக்கும் போது அதன் அதிர்வு அலைகள் அந்த இடத்தில் பரவி படிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். பரீட்சை நேரங்களில் டாலர், மோதிரம் அணியலாம். பணப்பெட்டியில் வைக்கலாம்.

ரோஸ்குவார்ட்ஸ்: உடம்புக்கு சூடுதன்மை கொடுக்கும். தீயசக்திகளை தடுப்பதில் அதிக சக்தி வாய்ந்தது. வீடு கட்டும்போது அடியில் போடலாம். வீட்டினுள்ளும், பிரமீடு, மரம் வைக்க, கணவன் மனைவி அன்பு அதிகரிக்க, தீயசக்தி தடுக்க உதவும். வீசிங் பிரச்சனைக்கு உதவும். ஜேடு, பெரிடாட், ஒனிக்ஸ் பணத்தை அதிகரிக்க செய்யும்.

கார்னீலியன்: இது ஆரஞ்சு கலரில் இருக்கும். உடம்பின் தொப்புளுக்கு கீழ் உள்ளது. பெண்களின் Period Irregular, Over Bleeding கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்திற்கும் ஏற்றது. Plenty of Wealஐ கொடுக்கும். வாழ்க்கையில் வெற்றிகளை அடைய இதுபோன்ற கிரிஸ்டல்களை பயன்படுத்தி நன்மை அடையலாம்.

ரெய்கி Chakras

bksureshv@gmail.com

அற்புதக்கலை ரெய்கி
ரெய்கி Chakras

நிறங்களும், தொடுணர்வும்

நிறங்களுக்கும், சக்கரங்களுக்கும் மட்டுமன்றி சில நோய்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள் எம் முன்னோர்கள். ரெய்கி சிகிச்சையில், சில சக்கரங்களைச் சக்தி யூட்டும்போது, சக்தியுடன் சில நிறங்களைக் கலந்து செலுத்தினால் கிடைக்கக்கூடிய பலன்கள் அதிக மாக உள்ளன. சில நிறங்களை, குறிப்பிட்ட சில வியாதிகளுக்காகத் தரும்போது, அந்த வியாதி,  ஆச்சரியப்படும் விதத்தில் தீர்ந்துபோகிறது. சில நிறங்கள், சில அதிர்வுகளோடு தொடர்புள் ளவை. அந்த அதிர்வுகள், சங்கீத அதிர்வுகளாகவும் இருக்கலாம். சங்கீதத்தால் வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்றும் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாகவும் எத்தனையோ சங்கீத விற்பன்னர்கள் கூறி வருகின்றனர்.

நிறம் - சங்கீதம் - சக்கரம் என்று தொடர்புபடுத்தி ஆய் வுகள் மேற்கொண்டால், மேலும் நல்ல பலன்களைப் பெற முடியும். ஒவ்வொரு நிறத்துக்கும் சில குணங்கள், தன்மைகள் இருக்கின்றன. அதனால் தான், வீட்டின் பிரதான மண் டபத்துக்கு ஒரு நிறம். படுக்கை அறைக்கு ஒரு நிறம், படிக்கும் அறைக்கு ஒரு நிறம், சமையல் அறைக்கு ஒரு நிறம் என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகிறது. நம்முடைய உடலிலேயே வானவில்லின் ஏழு நிறங்களும் உள்ளன. ஒவ்வொரு சக்கரமும் ஒவ் வொரு வண்ணத்துடன் சுழலும் நீர்ச்சுழி போலவே உள்ளன.

அதன்படி,

1. மூலாதாரம் (Base Chakra) - சிவப்பு

2. ஸ்வாதிஷ்டானம் (Sacral Chakra) - ஆரஞ்சு

3. மணிபூரகம் (Solar Plexus) - மஞ்சள்

4. அநாகதம் (Heart Chakra) - பச்சை

5. விசுத்தி (Throad Chakra) - நீலம்

6. ஆக்ஞா (Third eye chakra) - கருநீலம்

7. சஹஸ்ரஹாரம் (Crown Chakra) வயலெட்

என்று இருப்பதால், ரெய்கியின் தியானங்க ளும் இந்த வண்ணங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன.எந்தச் சக்கரம், எந்த வண்ணத் தைக் கொண்டிருக்கிறதோ, அந்தச் சக்கரம் சார்ந்த உடல் உறுப்புகளுக்கு அந்தந்த வண்ணம் பர வும்போது, அந்தச் சக்கரமும் அது சார் ந்த பகுதிகளும் மேலும் புத்துண ர்வு பெறுவதை, ஆழ்ந்த தியானத் தில் இருக்கும் போது உணர முடியும்.

ரெய்கி சிகிச்சை பெறுவதும், மற்றவருக்கு அளிப் பதும் மிகவும் சுலபம். ரெய்கி சிகி ச்சை பெறுவதற்கு, கஷ்டப்பட வேண் டியதே இல்லை. கண்களை மூடிக் கொண்டு நாற்காலியில் அமைதி யாக உட்கார்ந்திருந்தாலே போதும். முடியாதவர்கள் படுத்துக்கொள்ளலாம்.